ஆந்திரா சமையல் 1 – பிரண்ட துவையல் (நல்லேரு ஊர்ப்பிண்டி)

Pirandai Thuvaiyal
Share

பிரண்டை         – 1 கட்டு

புளி               – சிறிய நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய்   – 7

பூண்டு            – 10 பல்

தனியா            – 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு   – 2 ஸ்பூன்

கடுகு             – தாளிப்பதற்கு

தேங்காய்          – 1 பத்தை

உப்பு              – தேவையான அளவு

எண்ணெய்        – 50 கிராம்

பிரண்டையைச் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி நாரை எடுத்துச் சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, சுத்தம் செய்த பிரண்டையைப் போட்டு நன்றாக வதக்கி, பொன் முறுவலாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் உளுத்தம் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

வறுத்தவற்றை எடுத்து ஆற வைக்கவும். பிறகு மிக்ஸியில் வதக்கிய பிரண்டை, வறுத்த உளுத்தம் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றைப் போட்டுப் புளியைப் போடவும். அத்துடன் தேங்காய்ப் பத்தையைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதோடு உப்பையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு கடுகைப் போட்டு, அது பொரிந்தவுடன் அரைத்த விழுதுகளைப் போடவும். விழுதுகளை நன்றாகக் கிளறவும். விழுது, துவையல் பக்குவத்துக்கு வந்த பிறகு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். பிரண்டத் துவையல் ரெடி. காலையில் எழுந்து இந்தத் துவையலைச் சாப்பிட்டால் உடல் உபாதைகளைப் போக்கும். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். தேங்காய் சாதம், தயிர் சாதம் போன்ற கலந்த சாதத்துக்குத் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.


Share

Related posts

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

பச்சைப்பயறு, பூண்டு சேர்த்து துவையல்?

Udhaya Baskar

பருப்பு இல்லாமல் வடை சுடுவது எப்படி ?

Udhaya Baskar

ஆந்திரா சமையல் 2 – தேங்காய் வெல்லம் போளி (கொப்பரக்காய பெல்லம் போளி)

Udhaya Baskar

Leave a Comment