ராஜஸ்தானில் பெட்ரோல் 105, ஆந்திரா, தெலுங்கானாவில் 101

Share

ராஜஸ்தான் மாநிலம் கங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.81-க்கும், டீசல் ரூ.98.64-க்கும் விற்பனையாகிறது. தெலுங்கு மொழி மக்கள் அதிகம் வசிக்கும் ஆந்திரா, தெலுங்கானாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் மாநிலங்களில் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது.

கடந்த மாதத்தில் 19 முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 பைசாவும், டீசல் லிட்டருக்கு 28 பைசாவும் உயர்த்தப்பட்டது. இதனால் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.94.76க்கும், டீசல் ரூ.85.66க்கும் விற்பனையாகிறது.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் மாநிலங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட வரி அதிகம் என்பதால் பெட்ரோல் டீசல் விலை அதிகம் காணப்படுகிறது.

ஆந்திர மாநிலம் வைசாக் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ரூ.100க்கு அதிகமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. வைசாக்கில் பெட்ரோல் ரூ.99.75க்கும், டீசல் ரூ.94.08க்கும் விற்பனையாகிறது. தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் பெட்ரோல் விலை ரூ.100.57க்கும், நிசாமாபாத்தில் ரூ.100.17க்கும், லடாக்கின் லெ நகரில் 100.43க்கும் விற்பனையானது.


Share

Related posts

படகு சவாரிக் கட்டணம் குறைப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Udhaya Baskar

மகாராஷ்டிராவில் ரசாயனம் பூசிய பேருந்துகள்

Rajeswari

புதிய கட்டிடப்பணியை திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு ! பரபரப்பு!

Udhaya Baskar

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன

Udhaya Baskar

நோய் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

Udhaya Baskar

போக்குவரத்துக்கழக பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு

Admin

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது – முதலமைச்சர் உறுதி

Admin

மீண்டும் 5 காசு உயர்ந்தது முட்டை விலை!

Udhaya Baskar

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

சிறையில் படித்து 3ம் வகுப்பு பாஸான சசிகலா

Admin

அ.தி.மு.க. அரசின் ஊழலுக்கு உடந்தையா பா.ஜ.க.? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் சென்னை

Admin

Leave a Comment