ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Share

சிட்னி:
ஸ்திரேலிய அணியுடனான 2வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா, 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி மற்றும் 4 டெஸ்ட் பேட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.

இந்த நிலையில் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கியது. முதல் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று இரண்டாவது போட்டியை விளையாடியது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட், ஆஸ்திரேலியாவை பேட்டிங்க செய்ய அழைத்தார். முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வேடு 58 ரன்களும், ஸ்மித் 46 ரன்களும் எடுத்து அணிக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

மற்ற வீரர்கள் ஓரளவு அணிக்கு ரன்களை சேர்த்தனர். 20 ஒவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன் குவித்து.இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்து வீசினர். குறிப்பா நடராஜன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். தாகூர் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ராகுல் மற்றும் ஷிகர் தவான் அசத்தலாக ஆஸ்திரேலிய பந்துகளை விளாசினர்.

இருப்பினும் ஒரு புறம் ராகுல் (30) விக்கெட் இழக்க, மறுபுறம் ஆடிய தவான் 36 பந்துகளில் 52 ரன்களை குவித்தார். இதையடுத்து வந்த விராட் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விரட்டினார். ஆனால் விராட் துரதிருஷ்டவசமாக வெளியேற, சஞ்சு சாம்சனும் 15 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு விரட்டி ரன் மழை குவித்தார். மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் உள்ளார்.

கடைசி ஓவரில் 14 ரன் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா இரண்டு சிக்சர்களை விளாசி அணியின் வெற்றி முக்கிய பங்காற்றினார். 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் பாண்டியா 42 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்னுடன் களத்தில் இருந்தனர், இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.


Share

Related posts

+2 தேர்வுகள் ரத்து; நீட், நாட், கேட் தேர்வுகள் எதற்கு – இராமதாசு

Udhaya Baskar

ஜேஇஇ முதன்மைத் தேர்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும்

Admin

புரெவி புயல் பாதிப்பு: மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

Admin

கணவன் மனைவி குத்துச் சண்டை! பால்கனி சரிந்து விழுந்தது!

Udhaya Baskar

மழலையர் ஆரோக்கியத்திற்கு அங்கன்வாடி மையம்! விஜயதாரணிக்கு பாராட்டு!

Udhaya Baskar

வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை : முதல்வர் விளக்கம்

Admin

உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் – முதல்வர்

Admin

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Rajeswari

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Admin

தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.896 உயர்வு

Udhaya Baskar

வாக்காளர் பட்டியலில் தலைமை தேர்தல் அதிகாரி பெயர் விடுபட்டதால் பரபரப்பு

Admin

Leave a Comment