பான்கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்

pan aadhar link
Share

தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டித்து வருமானவரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டித்து வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அவகாசத்தை பயன்படுத்தி பொதுமக்கள் இனியும் தாமதிக்காமல் இரண்டையும் இணைத்துவிடுவது நல்லது.

வருமான வரிச் சட்டத்தின்படி ஆதார் கார்டுடன் பான் எண் இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு செயலிழந்ததாக அறிவிக்கப்படும். செயலிழந்த பான் கார்டுகளை பயன்படுத்த முடியாது. பான் கார்டு விவரங்களை வழங்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின்படி ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும். புதிய நிதி மசோதாவின் படி, பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களுக்கு குறைந்தது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.incometaxindiaefiling.gov.in சென்று ‘Link Aadhaar’ பிரிவில் ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி இணைத்துவிடலாம். உங்கள் ஆதாருடன் பான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ‘Aadhaar Status’ பிரிவில் பின்னர் தெரிந்துகொள்ளலாம்.

567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN SPACE 12 digit Aadhaar SPACE 10 digit PAN என்ற முறையில் எஸ்எம்எஸ் அனுப்பி ஆதாருடன் பான் கார்டை இணைத்துவிடலாம். இந்த இணைப்புக்கு எந்தக் கட்டணமும் இல்லை.


Share

Related posts

கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Udhaya Baskar

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை தற்கொலை வழக்கில் விரைவில் உண்மை வெளிவரும் – அமைச்சர்

Admin

இந்தியாவின் முதல் ஏசி ரயில் முனையம் பெங்களூரில் ! பயன்பாட்டுக்குத் தயார் !

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாசு

Udhaya Baskar

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

டெல்லியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Admin

பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம் – இபிஎஸ்-ஓபிஎஸ்

Udhaya Baskar

உத்திரபிரதேச அரசின் அதிரடி உத்தரவால் மருத்துவர்கள் அதிர்ச்சி

Admin

போலீஸ் போல் நடித்து 2.25 லட்சம் அபேஸ் ! கோழி சம்பாதித்து கொடுத்த பணம் பறிபோனது !

Udhaya Baskar

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் மவுனம் ஏன்? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க முடியுமா?- மு.க.ஸ்டாலின்

Admin

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

Leave a Comment