150 ஆண்டுகள் சேவை செய்த புளியமரம் ! சூறாவளிக் காற்றில் சுருண்டு விழுந்தது !

Share

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 150 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கு பயன்பட்டு வந்த பழமை வாய்ந்த புளியமரம் சூறாவளி காற்றால் வேரோடு சாய்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட புளியமரம் இன்று அதிகாலை அடித்த மிகப்பெரிய சூறாவளி காற்றால் வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்தப் புளிய மரத்தின் ஒரு பக்கம் வணிக நிறுவனங்களும் மருத்துவமனையும் மற்றொரு பக்கம் தேசிய நெடுஞ்சாலையும் இருக்கிறது. இன்று அதிகாலை அடித்த சூறாவளி காற்றில் இந்த பழமை வாய்ந்த புளியமரம் சாலையின் நடுவில் விழுந்ததால் மிகப்பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. வாகனங்களில் செல்வோர் மாற்றுப்பாதையில் போலீசாரால் திருப்பி விடப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த நெடுஞ்சாலைத்துறையினர் பணியாட்களை வைத்து அதிவிரைவாக புளியமரத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.


Share

Related posts

கக்கன் 112வது பிறந்தநாள் – அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

ஆடியில் ஆடி கார் ஆஃபர்! வெறும் 99.99 லட்சம்தான்

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – முதல்வர்

Admin

அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்

Udhaya Baskar

பெட்ரோல் விலை: தி.மு.க இரட்டை வேடம் அம்பலம் – அன்புமணி

Udhaya Baskar

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை விளக்கம்

Admin

கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Udhaya Baskar

கலைஞரின் நினைவு நாள் – கழகத்தலைவரின் காணொலி உரை

Udhaya Baskar

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்

Admin

மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

Admin

Leave a Comment