மனைவி இயற்கை எய்தினார்! தேம்பி அழுத ஓஎபிஎஸ்சுக்கு ஸ்டாலின் ஆறுதல்!

Share

தமிழ்நாடு அரசின் முன்னாள் துணை முதல்வரும் அதிமுக அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி காலமானார். அவருக்கு வயது 66. தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு சென்று ஓ.பி.எஸ். மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உடல்நலக் குறைவு காரணமாக ஓ.பி.எஸ். அவர்களின் மனைவி விஜயலட்சுமி பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உடல்நலம் தேறியிருந்தது. இன்று வீட்டிற்கு செல்வார் என்ற நிலையில் அதிகாலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதயநோய் நிபுணர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலை 6.45 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.

தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மனைவியை இழந்த ஓபிஎஸ் துயரம் தாளாமல் முதலமைச்சரிடம் ஓ.பி.எஸ். கண்கலங்கிய நிலையில், முதலமைச்சர் ஓபிஎஸ் கைகளை பிடித்து ஆறுதல்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவமனைக்கு சென்று ஓ.பி.எசுக்கு ஆறுதல் கூறினார்.


Share

Related posts

அதிகம் இல்லை ஜெண்டில்மென்! உங்கக் கடன் ரூ.2.63 லட்சம்தான்!

Udhaya Baskar

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

ஆகஸ்ட் 17 மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Udhaya Baskar

சென்னையிலிருந்து ரேணிகுண்டாவுக்கு இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம்

Admin

Whatsup-ல் இனி Dark Mode பயன்படுத்தலாம் ! மகிழ்ச்சி !

Udhaya Baskar

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை: ராதாகிருஷ்ணன்

Admin

OPPO Reno4 Pro Price Rs.34,990/-

Udhaya Baskar

குழந்தை பெற்றெடுக்கும் மிஷின்தான் பெண்கள் ! நடிகை சர்ச்சை பேட்டி!

Udhaya Baskar

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

பால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல்

Udhaya Baskar

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து!முன்பதிவு செய்துக்கொள்ளலாம்

Udhaya Baskar

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

Leave a Comment