ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன

Share

டோக்யோவில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்த ஒலிம்பிப் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. 39 தங்கப் பதக்கங்கள், 41 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 113 பதக்கங்கள் பெற்று அமெரிக்கா முதலிடம் பெற்றது.

டோக்யோ விளையாட்டரங்கத்தில் நடந்த நிறைவு விழாவில் போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் கொடிகளுடன் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசிய கொடியேந்தி கலந்து கொண்டார்.

39 தங்கப் பதக்கங்கள் பெற்றுப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பெற்றபோதும், 5 ஆண்டுகளுக்கு முன் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கையைவிட தற்போது குறைவாகவே பெற்றுள்ளது. 38 தங்கப் பதக்கள், 32 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா 2வது இடத்தை தக்க வைத்துள்ளது.

27 தங்கப் பதக்கங்கள் பெற்று ஜப்பான் 3வது இடத்திலும், 22 தங்கங்களுடன் பிரிட்டன் 4வது இடத்திலும் உள்ளன. 20 தங்கப் பதக்கம் வென்ற ரஷ்யா 5வது இடத்திலும், 17 தங்கப் பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலியா 6வது இடத்திலும் உள்ளன. இந்தியா 1 தங்கப் பதக்கம், 2 வெள்ளிப் பதக்கம், 4 வெண்கலப் பதக்கம் என 7 பதக்கங்களை வென்று 48வது இடத்தில் உள்ளது.


Share

Related posts

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

குன்னூரில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதி வேண்டும் – மா.சுப்பிரமணியன்

Udhaya Baskar

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

எந்த நேரத்திலும் சுதாகரன் விடுதலை – சிறைத்துறை

Admin

பிரச்சாரத்தின் போது ஆம்புலன்சுக்கு வழி விட கோரிய முதலமைச்சர்

Admin

150 ஆண்டுகள் சேவை செய்த புளியமரம் ! சூறாவளிக் காற்றில் சுருண்டு விழுந்தது !

Udhaya Baskar

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

Udhaya Baskar

கொரோனா அச்சம் ! ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது !

Udhaya Baskar

ஆன்லைனில் சரக்கு! “குடி”க்கும் மகன்கள் மகிழ்ச்சி

Udhaya Baskar

அணையா தீபம்! பெண் உருவத்தில் விநாயகர்! சுசீந்திரத்தில்!

Udhaya Baskar

Leave a Comment