ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Share

ஓபிசி பிரிவினருக்கான பட்டியலை மாநில அரசுகளே முடிவு செய்து இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

ஓபிசி வகுப்பினரை கண்டறிந்து பட்டியல் தயாரிக்க மாநில அரசுகளுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின்றி மசோதா மீது விவாதம் நடைபெற்றது.

இந்த மசோதா மூலமாக 671 சாதி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டு வாய்ப்புகள் கிடைக்கும் என மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் குறிப்பிட்டார். மசோதாவுக்கு ஆதரவாக 385 மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், யாரும் மசோதாவை எதிர்க்கவில்லை.

ஓபிசி சமூகத்தினரை அடையாளம் காணும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு பறித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இந்நிலையில் இது நாடாளுமன்றத்தில் நிறைவேறியதன் மூலம் மீண்டும் மாநில அரசுகளுக்கு இட ஒதுக்கீட்டிற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


Share

Related posts

பெண் கிடைக்காமல் விரக்தி ! திருநங்கையுடன் திருமணம் ! மாமன் மகன் மணவாளன் ஆன கதை !

Udhaya Baskar

பழமையான பொருட்கள் அரசுக்கே சொந்தமானது – அமைச்சர்

Admin

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

Admin

கூப்பிட்டால் வருவேன் ! வாக்குறுதி தந்த பெண் கவுன்சிலருக்கு செக்ஸ் டார்ச்சர் !

Udhaya Baskar

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Udhaya Baskar

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை

Udhaya Baskar

மேலும் ஒரு மாணவி தற்கொலை: நீட் தேர்வை ரத்து செய்வது தான் தீர்வு! – இராமதாசு

Udhaya Baskar

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

தமிழக அமைசரவையில் பாஜக இடம் பெறும்: எல் முருகன்

Admin

Leave a Comment