அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Share

திடீரென ஏற்பட்ட கோபத்தால் தூக்கியடிக்கப்பட்ட பந்து லைன் நடுவர் மீது பட்டதால், உலகின் நம்பர் ஓன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெறும் அமெரிக்க டென்னிஸ் ஓபன் தொடரில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கவில்லை. இதனால், செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர் ஓன் வீரரான நோவக் ஜோகோவிச் பட்டத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் 6ல் நடந்த 4-வது சுற்றில் ஸ்பெயினின் கரீனோ பஸ்டோவை ஜோகோவிச் எதிர்கொண்டார். கரீனோ முதல் செட்டில் 6-5 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றதால் ஜோகோவிச் ஆத்திரமடைந்து டென்னிஸ் பந்தை வேகமாக களத்துக்கு வெளியே அடித்தார். அந்த பந்து லைன் நடுவராக நின்ற பெண்ணின் முகத்தில் பட்டு விட்டது . இதில், நிலை தடுமாறிய அந்த நடுவர் கீழே விழுந்தார். உடனடியாக , அவரிடத்தில் ஓடி சென்ற ஜோகோவிச் மன்னிப்பு கேட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் நிர்வாகம் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யபட்டார். ஸ்பெயின் வீரர் கரீனோ பாஸ்டோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கோரினார் ஜோகோவிச். வேண்டுமென்றே இந்த தவறை தான் செய்யவில்லை எனவும் பாதிக்கப்பட்ட நடுவர் மற்றும் அமெரிக்க ஓபன் நிர்வாகம் மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 33 வயதான ஜோகோவிச் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார்.


Share

Related posts

பால் முகவர்கள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும் – பொன்னுசாமி

Udhaya Baskar

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Udhaya Baskar

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

முகப் பொலிவுக்கு வாழைப்பழ முகக் கவசம் – ரகுல் ப்ரீத் சிங்

Udhaya Baskar

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை – கல்வி அமைச்சர்

Admin

தமிழகம்-பொது பொக்குவரத்துக்கு அனுமதி, இபாஸ் ரத்து

Udhaya Baskar

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

கமல்ஹாசனை வைத்து இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் ?

Udhaya Baskar

ஆவின் நிர்வாகத்தை முதலமைச்சர் காப்பாற்ற வேண்டும் – சு.ஆ.பொன்னுசாமி !

Udhaya Baskar

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பு

Admin

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

Leave a Comment