அமைச்சர் அந்தஸ்து வேணாம்; முதல்வர் அந்தஸ்துதான் வேணும்- எடியூரப்பா

Share

கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா, தனக்கு வழங்கப்பட்ட அமைச்சர் அந்தஸ்தை வேண்டாம் என கூறி, அந்த உத்தரவை திரும்ப பெறும்படி வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் இரண்டு வருடங்களாக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா கட்சி தலைமை உத்தரவுப்படி அந்த பதவியில் இருந்து விலகினார். இதை அடுத்து பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். எனினும் முதலமைச்சராக இருந்த எடியூரப்பாகவுக்கு ஏதேனும் சலுகை வழங்க முடிவு எடுத்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அவருக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்குமாறு உத்தரவிட்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த எடியூரப்பா ‘முன்னாள் முதல் அமைச்சருக்கான வசதிகள் எதுவோ அதை மட்டும் கொடுத்தால் போதும் எனவும், அமைச்சர் அந்தஸ்து வேண்டாம்’ என்றும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

எடியூரப்பா ஒருவேளை அமைச்சர் அந்தஸ்தை ஏற்றுக்கொண்டார் என்றால் அவர் காவிரி இல்லத்திலேயே தொடர்ந்து வசிக்கலாம். மாத சம்பளத்தை தவிர்த்து வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் ‘அலவன்ஸ்’ மற்றும் வீட்டு வாடகை மாதம் 1 லட்சம் கிடைத்திருக்கும். மேலும் ஆண்டுக்கு 1,000 லிட்டர் எரிபொருளை இலவசமாக பெறலாம். வீட்டு உபகரணங்கள் வாங்க 10 லட்சம் ரூபாய் வரை கிடைத்திருக்கும், வாகனம் வாங்க 21 லட்சம் ரூபாய் மற்றும் வீடு, அலுவலகத்தில் இலவச தொலைபேசி இணைப்பும் வழங்கப்படும்.


Share

Related posts

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா

Udhaya Baskar

Hatsun ஆலையில் அம்மோனியா கசிவு, சுருண்டு விழுந்த தொழிலாளர்கள் ! துணை முதலமைச்சர் அதிர்ச்சி

Udhaya Baskar

மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

Admin

கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி

Admin

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

அரசு மருவத்துக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்புஉறுதி

Admin

ஆய்வுக்கு வந்த மத்திய குழு மீது விவசாயிகள் புகார்

Admin

சென்னைதான் எனக்குப் பிடிச்ச ஊரு ! சிஎஸ்கே வீரர் புகழாரம் !

Udhaya Baskar

களப்பணிகளில் உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு வீரவணக்கம் – திருமா.

Udhaya Baskar

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் லஞ்சம் கேட்கிறார்கள் ! – கோர்ட்

Udhaya Baskar

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

Leave a Comment