பட்டணத்து பணம் வேணாம்! பட்டிக்காட்டு கூழ் போதும் ! மடிக்கணியை வீசிவிட்டு மண்வெட்டியை எடுத்த பட்டதாரி !

Share

படித்த படிப்புக்கு உரிய சம்பளம் கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்ட பட்டதாரி ஒருவர் தற்போது விவசாயம் மேற்கொண்டு மனநிறைவுடன் வாழ்ந்து வருகிறார்.

நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்தவர் பட்டாதாரி அபிமன்யூ. இவர் பூண்டு மற்றும் காய்கறி விவசாயம் மூலம் முழு நேர விவசாயியாக மனநிறைவோடு அந்த பணியை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவருக்கு தேவையான ஊதியமும் விவசாயத்தில் கிடைப்பதாக மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அபிமன்யூ எம்.பி.ஏ படித்து விட்டு கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு தேவையான சம்பளம் கிடைக்கவில்லை. எனவே அவரது தந்தை போலவே விவசாயம் செய்யலாம் என முடிவு செய்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக அபிமன்யூ தனது தந்தையுடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டார். தற்போது 10 ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்து அதிக வருமானம் ஈட்டுகிறார். பூண்டு கிலோ ஒன்றுக்கு 230 ரூபாய் வரை விலை கிடைப்பதால் போதுமான அளவு லாபம் கிடைப்பதாக விவசாயி அபிமன்யூ கூறுகிறார்.

மேலும் தனது விவசாய தோட்டத்தில் காய்கறிகள் மற்றும் ஆரஞ்சு, முள்சீத்தா உள்ளிட்ட பழவகைகளையும் பயிரிட்டுளார். தான் படித்த படிப்பிற்கு கிடைத்த வருமானத்தை விட தற்போது அதிக வருமானத்தை ஈட்டுவதாகவும், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவதாக அபிமன்யூ பெருமையோடு கூறினார்.


Share

Related posts

திருமாவளவனுக்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்

Admin

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Rajeswari

வாக்காளர் பட்டியலில் தலைமை தேர்தல் அதிகாரி பெயர் விடுபட்டதால் பரபரப்பு

Admin

டிசம்பர் 29 முதல் டாஸ்மாக் பார்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

Admin

சிவில் சர்வீஸ் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு?

Admin

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன்: கமல்

Admin

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேம்: அமைச்சர் உறுதி

Admin

ஒரு ரூபா லாபம், 20,000 ரூபா நஷ்டம்; பயணிக்கு பஸ் நிர்வாகம் தண்டம் !

Udhaya Baskar

மக்களுக்காக ரஜினியுடன் இணைய தயார் – கமல்ஹாசன்

Admin

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

பாலிவுட் பிரபலத்திற்கு புற்றுநோய் ! ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Admin

Leave a Comment