உரிமைக்குழு புதிய நோட்டீஸ்களை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு

Share

கடந்த 19.07.2017 அன்று சட்டப்பேரவையில் குட்கா பாக்கெட்டுகள் மற்றும் புகைப்படங்கள் காட்டப்பட்டது தொடர்பாக உரிமைக்குழு நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீதான வழக்கில் கடந்த 25.08.2020 அன்று, மாண்புமிகு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் மாண்புமிகு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 07.09.2020 அன்று கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு, 19.07.2017 (மூன்றாண்டுகளுக்கு முன்னர்) அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மீண்டும் விவாதித்ததாகக் கூறி தமிழகச் சட்டப்பேரவைச் செயலாளர், தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, 14.09.2020 அன்று தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புது நோட்டீஸ்களின் நோக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களை நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து தடுப்பதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாகக் கையாண்ட விவகாரத்தைச் சட்டமன்றத்தில் எழுப்புவதைத் தவிர்க்கவுமே என்பது தெளிவாகிறது.

எனவே, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் இந்தப் புதிய நோட்டீஸ்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் புதிய ரிட் மனுவினைத்  தாக்கல் செய்துள்ளனர்.


Share

Related posts

எல்லைத்தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Admin

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Udhaya Baskar

ஒன்றிய அரசுன்னு ஏன் சொல்றோம்னா? – எம்கேஎஸ்

Udhaya Baskar

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை !

Udhaya Baskar

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Admin

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் சென்னை

Admin

ஆடியில் ஆடி கார் ஆஃபர்! வெறும் 99.99 லட்சம்தான்

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் உத்தரவு

Udhaya Baskar

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

என் மகளை அடித்தே கொண்டு விட்டனர்- பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ராவின் தாய் குற்றச்சாட்டு

Admin

Leave a Comment