புதிய அமைச்சர்களின் இலாக்காக்கள் விவரம்

Share

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை முதல் முறையாக நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ வர்தன், ரமேஷ் பொக்ரியால் போன்ற மூத்த அமைச்சர்கள் உட்பட 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய, 43 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில் 36 பேர் புதுமுகங்கள். 7 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

அமைச்சரவையில் ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ வர்தன், ரமேஷ் பொக்ரியால், பிரகாஷ் ஜடேகர் உள்ளிட்ட 6 கேபினட் அமைச்சர்கள் உட்பட 12 ஒன்றிய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

மபியின் ஜோதிராதித்யா சிந்தியா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால், பீகாரின் பசுபதி குமார் பராஸ் உள்ளிட்டோருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு புதிய அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. 7 பெண்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

ஒன்றிய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் அமைச்சர்களுக்கான இலாக்கா விபரம்.

பிரதமர் மோடி (பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி மற்றும் அனைத்து முக்கிய கொள்கை சார்ந்த விவகாரங்கள்),
ராஜ்நாத் சிங் (பாதுகாப்பு), அமித்ஷா (உள்துறை, கூட்டுறவு), நிதின் கட்கரி (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை), நிர்மலா சீதாராமன் (நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரம்), நரேந்திரசிங் தோமர் (விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம்), ஜெய்சங்கர் (வெளியுறவு), அர்ஜூன் முண்டா (பழங்குடியினர் நலம்), ஸ்மிருதி இரானி (பெண்கள் மற்றம் குழந்தைகள் மேம்பாடு), பியூஸ் கோயல் (வர்த்தகம் மற்றும் தொழில்; நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் ஜவுளி), தர்மேந்திர பிரதான் (கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர்), பிரகலாத் ஜோஷி (நாடாளுமன்ற விவகாரம்; நிலக்கரி மற்றும் சுரங்கம்), நாராயண் ரானே (சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்), சர்பானந்தா சோனோவால் (துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து மற்றும் ஆயுஷ்), முக்தர் அப்பாஸ் நக்வி (சிறுபான்மையினர் நலம்), வீரேந்திர குமார் (சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்), கிரிராஜ் சிங் (கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்), ஜோதிராதித்யா சிந்தியா (விமான போக்குவரத்து), ராமச்சந்திர பிரசாத் சிங் (எஃகு), அஸ்வினி வைஷ்ணவ் (ரயில்வே; தகவல் தொடர்பு மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பம்), பசுபதி குமார் பராஸ் (உணவு பதனிடும் தொழில்), கஜேந்திர சிங் செகாவத் (ஜல் சக்தி), கிரண் ரிஜிஜூ (சட்டம் மற்றும் நீதி),
ராஜ்குமார் சிங் (மின்சாரம்; புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி), ஹர்தீப் சிங் புரி (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு; வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி), மனுசுக் மண்டாவியா (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை; உரம் மற்றும் ரசாயனம்), பூபேந்தர் யாதவ் (சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு), மகேந்திரநாத் பாண்டே (கனரக தொழில் துறை), புருஷோத்தம் ரூபாலா (மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளம்),
கிஷண் ரெட்டி (கலாச்சாரம்; சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி), அனுராக் சிங் தாக்கூர் (தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு)

தனி பொறுப்பு இணை அமைச்சர்கள்

ராவ் இந்தர்ஜித் சிங் (புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கம்); திட்டம் மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை இணை பொறுப்பு, ஜிதேந்திர சிங் (அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்); புவி அறிவியல் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை பொறுப்பு

இணை அமைச்சர்கள் விவரம்

ஸ்ரீபத் யஸ்சோ நாயக் (துறைமுகம், கப்பல் போக்குவரத்து; சுற்றுலா), பக்கன்சிங் குலஸ்தே (எஃகு மற்றும் கிராமப்புற மேம்பாடு), பிரகலாத் சிங் படேல் (ஜல் சக்தி மற்றும் உணவு பதனிடும் தொழில்கள்), அஸ்வினி குமார் சவுபே (நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம், சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம்), அர்ஜூன் ராம் மேக்வால் (நாடாளுமன்ற விவகாரம்; கலாச்சாரம்), வி.கே.சிங் (சாலை மற்றும் நெடுஞ்சாலை; விமான போக்குவரத்து), கிரிஷன் பால் (மின்சாரம்; கனரக தொழில்),
தன்வே தாதாராவ் (ரயில்வே; நிலக்கரி, சுரங்கம்), ராம்தாஸ் அத்வாலே (சமூக நீதி, அதிகாரமளித்தல்), சாத்வி நிரஞ்சன் ஜோதி (நுகர்வோர் விவகாரம்; உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் கிராமப்புற மேம்பாடு), சஞ்சீவ் குமார் பல்யான் (மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளம்), நித்யானந்த் ராய் (உள்துறை), பங்கஜ் சவுத்ரி (நிதித்துறை), அனுப்ரியா சிங் படேல் (வர்த்தகம் மற்றும் தொழில்துறை), எஸ்.பி.சிங் பாகேல் (சட்டம் மற்றும் நீதி), ராஜீவ் சந்திரசேகர் (திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்), சோபா கரண்ட்லஜி (வேளாண் மற்றும் விவசாயிகள் நலம்), பானு பிரதாப் சிங் வர்மா (சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்), தர்ஷணா விக்ரம் ஜர்தோஷ் (ஜவுளி மற்றும் ரயில்வே), முரளீதரண் (வெளியுறவு; நாடாளுமன்ற விவகாரம்), மீனாட்சி லேகி (வெளியுறவு; கலாச்சாரம்), சோம் பர்காஷ் (வர்த்தகம் மற்றும் தொழில்), ரேணுகா சிங் சருதா (பழங்குடியினர் நலம்), ரமேஷ்வர் டெலி (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு), கைலாஷ் சவுத்ரி (வேளாண், விவசாயிகள் நலன்), அன்னபூர்ணா தேவி (கல்வி), ஏ.நாராயணசாமி (சமூக நீதி, அதிகாரமளித்தல்),
கவுசல் கிஷோர் (வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி), அஜய் பட் (பாதுகாப்பு மற்றும் சுற்றுலா), பி.எல்.வர்மா (வடகிழக்கு பிராந்திய மேம்பாடு மற்றும் கூட்டுறவு), அஜய் குமார் (உள்துறை), தேவுசின் சவுகன் (தகவல் தொடர்பு), பகவந்த் கவுபா (புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி; உரம் மற்றும் ரசாயனம்), கபில் மோரிஸ்வர் பாட்டீல் (பஞ்சாயத்து ராஜ்), பிரதிமா பவுமிக் (சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்), சுபாஷ் சர்கார் (கல்வி) பகவத் கிஷண்ராவ் (நிதி), ராஜ்குமார் ரஞ்சன் சிங் (வெளியுறவு; கல்வி), பாரதி பிரவின் பவார் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்), பிஷ்வேஸ்வர் துடு (பழங்குடியினர் நலன் மற்றும் ஜல் சக்தி). சாந்தனு தாக்கூர் (துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து), முன்ஜபாரா மகேந்திரபாய் (பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்; ஆயுஷ்), ஜான் பர்லா (சிறுபான்மையினர் நலம்), நிஷித் பிரமானிக் (உள்துறை; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக பாஜ தலைவர் எல்.முருகனுக்கு மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் – மத்திய அரசு

Admin

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

டெல்லியில் 4-வது இந்தியா மொபைல் மாநாடு துவக்கம்

Udhaya Baskar

சென்னை பல்கலையில் தமிழ் பாடவேளைகளை குறைக்கக் கூடாது! – இராமதாசு

Udhaya Baskar

ரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ

Udhaya Baskar

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Admin

“கோமாதா ! ஓரமா போமாதா” சொன்னவருக்கு தரும அடி !

Udhaya Baskar

8 மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள்

Udhaya Baskar

பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக 2 இடங்கள் தேர்வு

Admin

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு

Admin

தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர்

Admin

கமல்ஹாசனை வைத்து இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் ?

Udhaya Baskar

Leave a Comment