ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

Share

ஆட்டோக்களுக்கான திருத்தப்பட்ட புதிய மீட்டர் கட்டணத்தை அறிவிக்கவும், OLA, UBER நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டியும் தமிழ்நாடு அரசுக்கு
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்புத் தலைவர் செ.பால் பர்ணபாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் போட்டு கட்டணம் வசூலிப்பதில்லை. ஏன் என்றால் 2013-ம் ஆண்டு தமிழக அரசால் திருத்தியமைக்கப்பட்ட மீட்டர் கட்டணமே இன்று வரை நீடிக்கிறது. இந்தக் கட்டணத்தை மறுமதிப்பீடு செய்து திருத்தி அமைக்கப்படவில்லை.

இதனால் பொது மக்கள் மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாகிறார்கள், இதற்கு ஆட்டோ ஓட்டுனர்களை மட்டும் குறை சொல்ல முடியாது , காரணம் 2013 – ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளையும், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களையும் அழைத்து கட்டண நிர்ணயம் செயவதற்காக கலந்தாய்வு செய்தது.
அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து அதற்கான உத்தரவை தமிழக அரசிதழில் பிறப்பித்தார்கள்.

ஆனால் அந்த உத்தரவு வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்ததே தவிர நடைமுறைப் படுத்தவில்லை. இன்றைய சூழலில், கார்ப்பரேட் நிறுவனங்களான OLA, UBER போன்ற நிறுவனங்களில் தங்களது ஆட்டோக்களை Attachment செய்து ஆட்டோ ஓட்டுனர்கள் தொழில் செய்து வருகிறார்கள் இதற்காக ஆட்டோ ஓட்டுனர்கள் ஒரு பயணத்திற்கு ரூபாய் 30/- ஐ அந்த நிறுவனத்துக்கு கமிஷனாக செலுத்த வேண்டும், இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் குறைந்த பட்சம் நூறு ரூபாய் கட்டணம் பெறக்கூடிய இடத்திற்கு மட்டுமே பயணிகளுக்கு சவாரி செய்கிறார்கள், மேலும் பயணிகள் அழைக்கும் இடத்திற்கு வர மறுக்கிறார்கள், இரவு நேரங்களில் நான்கு மடங்கு கட்டணங்கள் வசூலிப்பது இதைவிட வேதனைக்குரியது , அவசர காரணங்களுக்காக செல்லும் பயணிகளும் இதனால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்
. தன்னிச்சையாக கட்டணத்தை நிர்ணயித்துக் கொண்டு பயணிகளுக்கு ஆட்டோ இயக்குவதனால் பயணகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் வாக்கு, வாதமும் ஏற்படுகிறது.

எங்களது சிறு யோசனையாக அரசுக்கு தெரிவிப்பது என்னவென்றால் கார்ப்பரேட் நிறுவனங்களான OLA , UBER போன்ற இந் நிறுவனங்கள் செய்யும் கட்டண சேவையை போல் தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை உருவாக்கி பயணிகளுக்கு செய்யும் சேவையாக ( இலவசமாக ) செய்தால் நமது தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள், மேலும் இந்தியாவிலேயே இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எனவே எங்களின் பனிவான இரண்டு கருத்துக்களையும் தங்களிடம் சமர்பித்துள்ளோம், இன்றைய எரிபொருள் விலைவாசிக் கேற்ப ஆட்டோக்களுக்கு புதிய கட்டணத்தையும், வழிக்காட்டு நெரிமுறைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று மதிப்பும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் சார்பாக வேண்டி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Share

Related posts

தமிழகத்தில் தளவுர்களற்ற கடும் ஊரடங்கு அமல்…

Udhaya Baskar

தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Udhaya Baskar

Whatsup-ல் இனி Dark Mode பயன்படுத்தலாம் ! மகிழ்ச்சி !

Udhaya Baskar

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Admin

டாஸ்மாக்கை திறக்க காட்டும் ஆர்வம், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதில் இருக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

Udhaya Baskar

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் தற்கொலை – கனிமொழி கவலை !

Udhaya Baskar

மாணவர்களுக்கு திமுக வி.எஸ்.கலை செல்வன் வேண்டுகோள்…

Udhaya Baskar

தேனீர், சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டும் – பால் முகவர்கள் சங்கம்

Udhaya Baskar

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

கொரோனா இருந்தா நீங்களே டாக்டர் ஆகிடாதீங்க, ஆஸ்பத்திரிக்கு வாங்க !

Udhaya Baskar

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் துவங்கியது

Admin

Leave a Comment