ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Share

கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள ராஜமாலா பகுதியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சைரை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள ராஜமாலா பகுதி தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தமிழக தொழிலாளர்கள் 80 பேருக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி – 29 பேர் இதுவரை மரணமடைந்துள்ளார்கள் என்றும், மீதிப்பேரை மீட்கும் பணி தொடருகிறது என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள ராஜமாலா பகுதி தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தமிழக தொழிலாளர்கள் 80 பேருக்கும்…

Posted by M. K. Stalin on Sunday, August 9, 2020

அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் – தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்து அங்கும் செல்ல முடியாமல் உறவினர்கள் அனைவரும் கண் கலங்கி – தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்திட கேரள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிடுமாறும், தமிழக அரசின் சார்பிலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்திட வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கேரள மாநில முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள் தற்போது அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து – உயிரிழந்தோர் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் – மண்ணில் புதைந்து கிடக்கும் அனைவரையும் விரைந்து மீட்டிட மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


Share

Related posts

மதுக்கடைகள் திறப்பு ! அன்புமணி கண்டிப்பு !

Udhaya Baskar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

Udhaya Baskar

வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் – மத்திய அரசு

Admin

புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

Admin

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் மவுனம் ஏன்? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்த்து திமுக வழக்கு

Admin

டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Admin

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் துவக்கம்

Admin

திமுகவில் பொறுப்பாளர்கள் நியமனம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் – முதல்வர்

Admin

9 மாதங்களுக்கு பின் குற்றால அருவி திறப்பு

Admin

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Admin

Leave a Comment