உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு

Share

“தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம்  போற்றுகின்ற தீர்ப்பை,  தி.மு.க சார்பில் மனதார வரவேற்று மகிழ்கிறேன்!”

“குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அமைச்சர் மீது முதலமைச்சர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், இன்னும் குட்கா விற்பனை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மை மட்டுமல்லாமல்; தமிழகத்திற்கும் தலைகுனிவு ஆகும்”

– கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து, சட்டமன்ற ஜனநாயகத்தை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது.  

சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும், மக்களை வெகுவாகப் பாதிக்கும் பிரச்சினைகளையும்  சட்டமன்றத்தில் எழுப்பும் உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்றத் தவறி விட்டாலும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அந்த உரிமையை சட்டப்பூர்வமாகப் பாதுகாத்து இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. 

கேன்சரை உருவாக்கும் குட்கா விற்பனையைத் தாராளமாக அனுமதித்து அதில் பங்கேற்ற அ.தி.மு.க. அரசின் குட்கா ஊழலை நாட்டு மக்களுக்குத்  தெரிவித்திடவே குட்கா பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றதை மறைத்து, நீதி வழுவிய முறையில் பேரவைத் தலைவர் மூலமாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய சதிச் செயலில் இறங்கியது அ.தி.மு.க. அரசு.  அதை இந்தத் தீர்ப்பு தகர்த்தெறிந்து இருக்கிறது. சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம்  போற்றுகின்ற தீர்ப்பை,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனதார வரவேற்று மகிழ்கிறேன்!

இந்த வழக்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாதாடி – சிறப்பான இந்தத் தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருந்த கழகத்தின் மூத்த வழக்கறிஞர் திரு. ஆர். சண்முகசுந்தரம் மற்றும் திரு. என்.ஆர்.இளங்கோ எம்.பி., ஆகியோருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அமைச்சர் மீது தமிழக முதலமைச்சர் பழனிசாமி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், இன்னும் குட்கா விற்பனை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மை மட்டுமல்லாமல்; தமிழகத்திற்கும் தலைகுனிவு ஆகும். 

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் தாராளமாக விற்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்திய எதிர்க்கட்சியின் மீது உரிமை மீறல் விதியை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்குப் பாய்ந்த அரசு, குட்கா விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் பதுங்கி விட்டது. அதனால் குட்கா எனும் சமூகத் தீமையின் போக்குவரத்தும் விற்பனையும் கொடிகட்டிப் பறக்கிறது.


Share

Related posts

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு

Admin

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு சம்மன்

Admin

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேம்: அமைச்சர் உறுதி

Admin

பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்ற 4 பேர் கைது

Admin

கணவன் மனைவி குத்துச் சண்டை! பால்கனி சரிந்து விழுந்தது!

Udhaya Baskar

கொரோனா பரவலை தடுக்க வாகன சோதனை

Udhaya Baskar

விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குவேன்: மதிமுக அறிவிப்பு

Admin

செல்லிடப்பேசி வாயிலாக கொரோனா பரிசோதனை

Admin

மீண்டும் 5 காசு உயர்ந்தது முட்டை விலை!

Udhaya Baskar

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதான ஆர்ப்பாட்டம்: சமக மகளிர் அணியினர்

Admin

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா

Udhaya Baskar

Leave a Comment