விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டுமென்பது தேமுதிக தொண்டர்களின் விருப்பம்! கூட்டணியில் விரிசலா?- அமைச்சர் உதயகுமார்

Share

விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டுமென விருப்பப்படுவது தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகளின் உரிமை என் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “மதுரையில் கொரோனோ தடுப்பு பணி இரவு பகலாக மேற்கொண்டதன் பலனாக கொரோனோ தொற்று குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்பை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது . மாவட்டங்களில் முதல்வர் மேற்கொள்ளும் சுற்றுப்பயனம் மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த முதல்வரும் கையிலெடுக்காத மாவட்ட சுற்றுப்பயணத்தை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

இ பாஸ் எந்தவித சிரமமும் இல்லாத வகையில் எளிதாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் தடையின்றி உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. இ பாஸ் நடைமுறையை எளிமை படுத்திய பின்னர் இ பாஸ் கிடைக்கவில்லை என்ற புகார் வரவில்லை. இ பாஸ் நடைமுறை மக்களின் நலனுக்கும் பாதுகாப்பிற்காகவும் மட்டுமே தவிர எந்தவித உள்நோக்கமும் கிடையாது. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் உள்நோக்கம் கற்பிப்பது எதிர்க்கட்சி தலைவரின் வாடிக்கையாக உள்ளது. மத்திய அரசு கொடுக்கும் தளர்வுகளை முதல்வர் கவனத்துடன் ஆய்வு செய்து கையாண்டு வருகிறார்

ரயில் போக்குவரத்து, பொது போக்குவரத்து போன்றவை கால சூழ்நிலைக்கு ஏற்ப துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பொது போக்குவரத்து துவங்கியதால் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிட்டது. 5 மாத காலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தத்தளித்து வந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் வேளாண் பணிகள் தடையின்றி கிடைக்கவும் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இன்று விலைவாசி கட்டுக்குள் உள்ளது. அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாகவே தேமுதிக தெரிவித்துள்ளது. விஜயகாந்த் கிங்காக இருக்க வேண்டும் என தொண்டர்கள் நிர்வாகிகள் விருப்பப்படுவது அவர்களின் உரிமை” எனக் கூறினார்.


Share

Related posts

ராஜேஷ் கோட்சே மீது நடவடிக்கை தேவை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Udhaya Baskar

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணம்

Udhaya Baskar

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Udhaya Baskar

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

Admin

புக்கிங் செய்த அரை மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி புதிய தட்கல் முறை அறிமுகம்

Admin

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Udhaya Baskar

வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை : முதல்வர் விளக்கம்

Admin

தேவையற்ற உணவு பழக்கங்களே நோய்களுக்கு காரணம்: கலெக்டர்

Admin

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

Leave a Comment