பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Share

ஈரோடுமாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன், “தமிழக முதல்வர் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார். கோபி செட்டிபாளையம் பகுதியில் உள்ள 10 கோடி ரூபாய் மதிப்பிட்டில் தினசரி சந்தை விரிவுபடுத்த தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கொள்கை என்பது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான். இந்தாண்டை பொறுத்த வரையில் தற்போது வரை 2.35 லட்சம் மாணவர்களுக்கு மேல் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். இன்னும் கூடுதலாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர வாய்ப்புகள் உள்ளது.

தமிழகத்தில் அணைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி கொடுப்பது குறித்து தமிழக முதல்வர் ஏற்கனவே மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளார். அதனை பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு என்பது கிடையாது. கொரோனோ தாக்கம் குறைந்த பின்னர் தான் முடிவு செய்யப்படும்.10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை பொறுத்தே அவர்களுக்கு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.


Share

Related posts

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Udhaya Baskar

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

கைத்தறிகள் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் – கமல்

Udhaya Baskar

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

Udhaya Baskar

மே மாத மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட்டு செலுத்தலாம்

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.200 உயர்வு

Udhaya Baskar

ஆன்லைன் மூலம் ரூ.2.60 கோடி மோசடி

Admin

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா

Udhaya Baskar

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

பால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல்

Udhaya Baskar

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

Leave a Comment