குக்கிராமத்திற்கும் தடையில்லா மின்சாரம் ! திமுக அமைச்சர் ஏற்பாடு !

Share

குக்கிராமங்களிலும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதற்காக மதுரை மாவட்டம் சின்னப்பட்டி கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

மதுரை மேற்கு ஒன்றியம், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னப்பட்டி கிராமத்தில் 300 கிலோ வாட் திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை அமைச்சர் மூர்த்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னப்பட்டி கிராமத்தில் 300 கிலோ வாட் திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணை சேர்மன் கார்த்திக்ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தாசில்தார் முத்துவிஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சக்திமயில்பாண்டி, துணை தலைவர் ரஞ்சனி செந்தில், மாவட்ட கவுன்சிலர் சித்ராதேவி முருகன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதன் மூலம் இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதாக அப்பகுதி பொதுமக்கள் அமைச்சருக்கு நன்றி கூறினர். இதேபோன்று அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் கிராமத்திலும் புதிய டிரான்ஸ்பார்மரை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.


Share

Related posts

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- சுகாதார அமைச்சகம்

Admin

கருப்பு பூஞ்சை தொற்று, இன்னொரு ஆபத்தா???

Udhaya Baskar

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா?

Udhaya Baskar

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Rajeswari

குழந்தை வேண்டாமா? குப்பையில் போடாதீர்கள் !

Udhaya Baskar

கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை – சென்னை மாநகராட்சி

Admin

ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Udhaya Baskar

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு – மா.சுப்பிரமணியன் அழைப்பு

Udhaya Baskar

இனி 24 மணி நேரமும் RTGS சேவை மூலம் பணம் அனுப்பலாம்

Admin

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி

Admin

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

Leave a Comment