சென்னையில் காலை 7 மணி முதலே முதல் மெட்ரோ ரயில் – QR டிக்கெட் அறிமுகம்

Share

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை காலை 7 மணி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று காலை 8 மணிக்கு பதிலாக 7 மணிக்கு மெட்ரோ ரயில்சேவை தொடங்கும் என தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க டிராவல் கார்டு ரீடர் இயந்திரத்தையும் அறிமுகப்படுத்தினார். டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் டிக்கெட் வழங்கும் இயந்திரம் (டிவிஎம்) முன் வரிசையில் நிற்கத் தேவை இல்லை. ஒவ்வொரு நிலையத்திலும் டிராவல் கார்டு ரீடர் இயந்திரங்கள் வழியாக ரயில்நிலையத்திற்கு செல்லலாம்.

இதேபோல், பயணிகள் சிஎம்ஆர்எல் மொபைல் செயலி அல்லது சிஎம்ஆர்எல் வலைத்தளத்தைப் பயன்படுத்தி தங்கள் ஸ்மார்ட் கார்டுகளை டாப் அப் செய்யலாம். அதேபோல் டிக்கெட் வழங்கும் இயந்திரத்திற்கு பதிலாக டிராவல் கார்டு ரீடரைப் பயன்படுத்தலாம். அதில் பயணிகள் தங்கள் பயண அட்டையில் இருப்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

இதேபோல் contact less டிக்கெட் முறையை செயல்படுத்தியுள்ளது. இது கோவிட் பரவுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. தொடர்பு-குறைவான QR டிக்கெட் சமூக இடைவெளியை பின்பற்ற உதவுகிறது. தற்போதுள்ள சி.எம்.ஆர்.எல் மொபைல் பயன்பாட்டில் பயணிகள் க்யூஆர் குறியீடுகளின் வடிவத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தங்களுக்கு விருப்பமான பாஸ்களை வாங்க முடியும்.

இதற்கிடையே அலுவலக நேரங்களான காலை 8.30 மணி முதல் 10.30 மணிவரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்.

மற்ற நேரங்களில் 10 அல்லது 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக செப்டம்பர் 7ம் தேதி விமானநிலையம் – வண்ணாரப்பேட்டை மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படும். செப்டம்பர் 9ம் தேதி புனித தோமையார் மலை (செயிண்ட் தாமஸ் மவுண்ட்) – சென்ட்ரல் இடையே இயக்கப்படும்..


Share

Related posts

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Udhaya Baskar

ஏப்ரல் மாதம் பள்ளிகளை திறக்கலாம்- பெற்றோர் கருத்து

Admin

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Udhaya Baskar

ஒன்றிய அரசுன்னு ஏன் சொல்றோம்னா? – எம்கேஎஸ்

Udhaya Baskar

மக்களை சந்திக்க வாய்ப்பு கொடுத்த பாரதிய ஜனதா மாநில தலைவருக்கு நன்றி – குஷ்பு

Admin

பிரபல பாடலாசிரியர் மருத்துவமனையில் அனுமதி

Admin

சிறந்த உணவும், சிறந்த விந்தணுவும்

Udhaya Baskar

விரைவில் திமுக ஆளுங்கட்சியாக மாறும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

Admin

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு குடும்ப வாழ்க்கையில் பதவி உயர்வு!

Udhaya Baskar

வாழைப்பழம் 3,336 ரூபாய் ! கோயம்பேட்டில் அல்ல கொரியாவில்!

Udhaya Baskar

ரஜினி-கமல் கூட்டணியாலும் மாற்றத்தை கொண்டு வர முடியாது – சீமான்

Admin

Leave a Comment