தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா?

Share

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் 14 நாட்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மே 10 முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு திங்கள் அதிகாலை முடிவடைய உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 36 ஆயிரத்து 184 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும் வீட்டுத் தனிமையிலும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அதில் மேலும் 2 வாரங்களுக்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என முதலமைச்சரிடம் மருத்துவ வல்லுநர் குழுவினர் கேட்டுக்கொண்டனர். இதை தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தவாக சார்பில் வேல்முருகன், மமக சார்பில் ஜவாஹிருல்லா, கொமதேக சார்பில் ஈஸ்வரன், திமுக சார்பில் எழிலன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், புரட்சி பாரதம் சார்பில் ஜெகன்மூர்த்தி, சிபிஐ சார்பில் தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் சார்பில் நாகை மாலி, பாமக சார்பில் ஜி.கே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் பேசிய முதல்வர், தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்காகவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிலர் கொரோனா விதிகளை மதிக்காமல், விடுமுறை என நினைத்து ஊர்சுற்றுகின்றனர் என வேதனை தெரிவித்தார். மேலும் கொரோனா குறித்த பயம் மக்களின் பேச்சில் தெரிகிறது. ஆனால் செயலில் இல்லை எனவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தினால்தான் கொரோனாவை குறைக்கமுடியும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் 2 கொரோனா தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


Share

Related posts

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

Udhaya Baskar

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

Udhaya Baskar

பள்ளி கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவை இல்லை – அமைச்சர்

Admin

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

Udhaya Baskar

எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – மகன் மறுப்பு

Udhaya Baskar

கமல்ஹாசனை வைத்து இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் ?

Udhaya Baskar

தேனீர், சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டும் – பால் முகவர்கள் சங்கம்

Udhaya Baskar

கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Udhaya Baskar

தமிழகம் மீட்போம்! – திமுக சிறப்பு பொதுக்கூட்டங்கள்

Udhaya Baskar

தொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு

Admin

தங்கம் விலை ரூ.176 குறைந்தது

Udhaya Baskar

தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Udhaya Baskar

Leave a Comment