மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Share

தமிழக அரசால் புதியதாக தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த தொளவேடு கிராமத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் மூலம் பொதுமக்கள் மருத்துவமனையை தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தத் திட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ சேவை செல்லும். அதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று சில அத்தியாவசியமான மருத்துவச் சேவைகளை தமிழக அரசு வழங்க உள்ளது.

இந்த திட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சனை, குழந்தைகளுடைய பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்துள்ளார்.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பெரியாபளையத்தை அடுத்த தொளவேடு கிராமத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே கோவிந்தராசன், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட பெரும் குழு தலைவர் கே வி.உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் எம்எல்ஏ சி.ஹெச் சேகர், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ஜெயமூர்த்தி, பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பெருஞ்சேரி பி. ரவி, திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Share

Related posts

தங்கம் விலை ரூ.248 குறைந்தது

Udhaya Baskar

9 மாதங்களுக்கு பின் குற்றால அருவி திறப்பு

Admin

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

கேசவானந்த பாரதி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

ஒற்றை தலைமையும் ஒருங்கிணைப்பும் இருந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வெற்றி !

Udhaya Baskar

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

Udhaya Baskar

மாணவர்களிடம் கருத்துக் கேளுங்கள், பின் முடிவு செய்யுங்கள்! ராகுல், சோனியா

Udhaya Baskar

ஆவினில் முறைகேடு! முழுமையான விசாரணை தேவை – பால் முகவர் சங்கம்

Udhaya Baskar

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை- மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Admin

மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றார் சுஷில்குமார் மோடி

Udhaya Baskar

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

Leave a Comment