டாஸ்மாக்கை திறக்க காட்டும் ஆர்வம், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதில் இருக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

makkal neethi maiyam
Share

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவிட்-19 நோய் தொற்று காரணமான ஊரடங்கு ஐந்தாவது மாதத்தை கடந்து செல்லவிருக்கும் சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு கிஞ்சித்தும் இருப்பதாக தெரியவில்லை.

ஏனெனில் கடந்த ஐந்து மாதங்களாக குண்டூசி தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கி விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வரையிலும், ஆன்மீக வழிபாட்டுத் தலங்கள் முதல் கேளிக்கை பூங்காக்கள், சுற்றுலா மையங்கள்,  திரையரங்க வளாகங்கள் வரையிலும், ஆட்டோ முதல் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து வரையிலும் இன்னும் செயல்படாத நிலையே நீடிக்கிறது.

ஊரடங்கில் தளர்வுகள் எனும் பெயரில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளோடு சில தொழிற்சாலைகளையும், ஆட்டோக்களையும் இயங்கிட அனுமதித்திருந்தாலும் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து முற்றிலுமாக இயக்கப்படாத சூழலில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வர அவர்கள் படும் அவஸ்தைகள் என்பது சொல்லிமாளாது.

ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளால் தொழிற்சாலைகள், பல்வேறு பெரிய, பெரிய வணிக நிறுவனங்கள் எல்லாம் இயங்காததால் தொழிலாளர்கள் வேலை உறுதியின்றி, வருமானம் இழந்து தவித்து வருவதை உலகறியும்.

இந்த பேரிடர் காலத்தில் கொரோனா நிவாரண நிதியாக இரண்டாயிரம் ரூபாயும், சில மாதங்கள் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணை உள்ளிட்ட சமையல் பொருட்களை சொற்ப அளவில் கொடுத்து விட்டு அதனை அவர்களிடமிருந்து வட்டியோடு திரும்ப வசூலிக்க உயிரைக் கொல்லும் சாராயத்தை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளை திறந்து வியாபாரம் செய்யும் பணியை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜரூராக நடத்தி தொழிலாளர்களின் குடும்பத்தில் மிச்சமிருந்த சேமிப்பையும், தாய்மார்கள் கழுத்தில் இருந்த குண்டுமணி தங்கத் தாலியையும் பிடுங்கி கொள்ளத் தொடங்கியது வேதனைக்குரியது.

மக்களுக்கான அரசு என மார்தட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு ஊரடங்கை முடிவிற்கு கொண்டு வர பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை முழுமையாக இயக்கிடவும், அனைத்து வழிபாட்டு தலங்களையும், பூங்காக்களையும் திறந்து மக்கள் வழக்கம் போல் சென்று வரவும் அனுமதியளிக்க தவறி விட்டு டாஸ்மாக் கடைகளை திறக்காத மாவட்டங்களில் அவசர, அவசரமாக திறக்க முற்படுவதை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தொழிற்சாலைகளும், பொது போக்குவரத்தும் முழுமையாக செயல்பட்டால் கொரோனா நோய் தொற்று பரவிடும், வழிபாட்டு தலங்கள் திறந்திருந்தாலும் அந்நோய் தொற்று மக்களை கடுமையாக பாதிக்கும் என்றால் உயிரைக் கொல்லும் சாராயத்தை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் மூலம் மட்டும் கொரோனா பரவாது என்கிற தமிழக அரசின் எண்ணம் “நாய் விற்ற காசு குறைக்காது” எனும் பழமொழியையே நினைவூட்டுகிறது.

எனவே டாஸ்மாக் கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தில் பாதியளவேனும் மக்கள் நலனிலும், மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதிலும் கவனமெடுத்து தமிழக அரசு அக்கறை கொள்ள வேண்டும். அதற்கு பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளையும், அனைத்து தொழில் நிறுவனங்களையும், திரையரங்க வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா மையங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக துவக்கி மக்களின் இயல்பு வாழ்க்கை தங்குதடையின்றி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

“மக்கள் நீதி மய்யம்” தொழிலாளர்கள் அணி. எச்சரிக்கை: இணையதளங்களில் வரும் செய்திகளை அப்படியே எடுத்து வாட்ஸ்அப்பில் பகிரவேண்டாம். உங்களுக்கு இந்த செய்தி பிடித்திருந்தால் இந்த லிங்க்கை அப்படியே பார்வேர்டு செய்யுங்கள். ஏன் என்றால் இந்த செய்தியில் ஏதேனும் தவறுகள் இருந்தாலோ, சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருந்தாலோ இணையதளத்தில் திருத்தம் செய்து விடுவார்கள். அல்லது நீக்கி விடுவார்கள். ஆனால் அதை காப்பி எடுத்து போட்ட நீங்கள் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். இதை காப்பி செய்து போடுவதால் உங்களுக்கு எந்த பலனும் இல்லை. அது மட்டுமின்றி காப்பி செய்து போட்ட குற்றத்திற்காகவும் நீங்கள் குற்றவாளி ஆகிவிடுவீர்கள்.


Share

Related posts

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

ஓட்டுக்கேட்டவர்களுக்கு உதவ மனமில்லை ! கண்ணீர் விட்ட பெண்ணுக்கு மிரட்டல் !

Udhaya Baskar

PM WANI நாட்டில் தகவல் புரட்சியை உருவாக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

Admin

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

உரிமைக்குழு புதிய நோட்டீஸ்களை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு

Udhaya Baskar

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள்

Admin

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தையே இருக்காது – சீமான்

Admin

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

ஆன்லைனில் சரக்கு! “குடி”க்கும் மகன்கள் மகிழ்ச்சி

Udhaya Baskar

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

Leave a Comment