வரலட்சுமி விரதம் வழிபடும் முறைகள்

Share

மகாலட்சுமி தெய்வமே நேரில் வந்து தன்னுடைய பக்தர்களுக்கு உபதேசம் விரதமுறைதான் ‘வரலட்சுமி விரதம்’ ஆகும்.

வரலட்சுமி விரதம் சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையவும், மற்ற அன்பர்கள் தங்கள் குடும்பத்தின் நலன் கருதியும், செல்வ செழிப்புடன் வாழவும் கடைப்பிடிக்கும் ஒரு எளிய நோன்பு முறையாகும்.

மகாலட்சுமி தெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது முதல், கலசம் அமைத்து வழிபட்டு, பூஜை செய்து விரதத்தை முடிவு செய்யும் வரை எளிமையாக என்ன செய்ய வேண்டும் என்பதை கவனித்துப் பாருங்கள்.

மகாலட்சுமி தெய்வத்திற்கு கலசம் அமைத்து, முகம் வைத்து அல்லது அதற்கு பதிலாக தேங்காய் வைத்து அழகாக அலங்காரம் செய்து வீட்டிற்கு அழைப்பது வழக்கம். புதிதாக விரதம் ஆரம்பிப்பவர்கள் கலசம் வைக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் மகாலட்சுமியின் படம் வைத்து அந்த பக்தர்கள் வழிபடலாம்.

கலசம் அமைக்கும் பக்தர்கள் தொடர்ந்து மூன்று வருடங்கள் வரலட்சுமி பூஜையை செய்வது மிகவும் சிறப்பு. மகாலட்சுமி தெய்வத்தை முந்தைய நாள் வீட்டிற்கு அழைப்பது உண்டு. இல்லை என்றால் விரதம் மேற்கொள்ளும் நாளிலேயே அழைத்தும் பூஜைகளை மேற்கொள்ளலாம்.

பூரண கும்பத்தில் தோன்றும் மகாலட்சுமி தெய்வத்தை கும்பத்தில் எழுந்தருளச் செய்ய கலசம் அமைப்பது வழக்கம். பித்தளை, வெள்ளி, தங்கம், செம்பு உள்ளிட்ட உலோகங்களில் ஒரு கலசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் அல்லது அரிசி நிரப்பி வையுங்கள். தண்ணீர் ஊற்றுபவர்கள் அதனுள் மஞ்சள், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்கள், வெள்ளி அல்லது ஒரு ரூபாய் நாணயம், பச்சை கற்பூரம் மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அரிசி நிரப்புவதாக இருந்தால், அதனுடன் ஒரு சிறிய பொட்டலத்தில் பருப்பு போட்டு வைக்க வேண்டும். அவற்றுடன் நாணயம், எலுமிச்சைபழம், ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மஞ்சள் கிழங்கு, வெற்றிலை, பாக்கு, பூ, கருகமணி ஆகியவற்றை போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் மாவிலை அல்லது வெற்றிலை வைத்து நடுவே கலசத்தின் மீது தேங்காயை மஞ்சள் தடவி குங்குமம் பொட்டு வைத்து மகாலட்சுமியின் முகமாக ஆவாகனம் செய்ய வேண்டும். மகாலட்சுமியின் திருமுகம் பொதுவாக கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கி அழகாக அலங்கரித்து கொள்ளலாம்.

மகாலட்சுமிக்கு பட்டுப் பாவாடை அல்லது பட்டுப் புடவை, ரவிக்கை போன்றவற்றால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். கம்மல் மாட்டுவது, வளையல் போடுவது, முடி தரிப்பது போன்று உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மகாலட்சுமியை அழகாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.

கலசத்தை தயார் செய்துவிட்டு அதனை ஒரு மனையின் மீது வைக்க வேண்டும். பின்னர் பக்தர்கள் மனையை அலங்கரித்துவிட்டு அதில் மஞ்சள் தடவி கோலம் போட்டுக் கொள்வது மிகவும் நன்றாக இருக்கும்.

பின்னர் அதன் மீது வாழை இலை விரித்து நெல்மணி அல்லது பச்சரிசியை நிரப்புங்கள். அதன் மீது கலசம் அல்லது மகாலட்சுமியின் படத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

மனையுடன் அப்படியே கொண்டு போய் வெளி வாசற்படியில் வைத்து விடுங்கள். முந்தைய நாள் மகாலட்சுமியை அழைப்பதாக இருந்தால் வியாழனன்று மாலை அலங்காரம் செய்து வாசலில் ஒரு கற்பூரம் ஏற்றி மகாலட்சுமியை எழுந்தருளும்படி ஆவாகனம் செய்யுங்கள்.

பின்னர் வீட்டிற்குள் நீங்கள் எந்த இடத்தில் வைத்து பூஜை செய்ய நினைக்கிறீர்களோ, அந்த இடத்தை கோலமிட்டு அலங்காரம் செய்து மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்யுங்கள்.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தெய்வத்தை அழைப்பவர்கள் இதே முறையில் அழைத்து வந்து பூஜைகளை மேற்கொள்ளுங்கள். முந்தைய நாள் மகாலட்சுமி தெய்வத்தை அழைத்துக்கொள்பவர்கள் வெண் பொங்கல் நைவேத்தியம் வைத்து எளிமையான முறையில் அன்றைய பூஜைகளை முடித்து கொள்ளலாம்.

பின்னர் மறுநாள் வெள்ளியன்று காலையில் பூஜை செய்பவர்கள் 9.15 மணி முதல் 10.15 மணி வரை மேற்கொள்ளலாம். மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையிலான காலகட்டத்தில் பூஜைகளை செய்வது நல்லது.

பூஜையில் உங்களுக்கு விருப்பமான நைவேத்தியங்கள் படையுங்கள். பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சுண்டல், சித்திரன்னம் எனப்படும் கலவை சாத வகைகள் வைத்தும் மகாலட்சுமியை வழிபடலாம்.

பின்னர் 9 நூல் கோர்த்த இலைகள் கொண்ட நோன்பு கயிறு வாங்கி பூ ஒன்றை கட்டி வைத்து கொள்ளுங்கள். பூஜை நிறைவு செய்யும் பொழுது தாம்பூலம் கொடுத்து பக்தர்களை வழியனுப்ப வேண்டும் எனவே தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, ரவிக்கை வைத்து கொடுங்கள்.

பரம்பரையாக பூஜை செய்பவர்கள் சுமங்கலிகளுக்கு அமுது படைத்து, புடவை வாங்கி வைத்து கொடுப்பது வழக்கம்.


Share

Related posts

வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை : முதல்வர் விளக்கம்

Admin

பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம் – இபிஎஸ்-ஓபிஎஸ்

Udhaya Baskar

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்

Admin

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் தங்கம்

Rajeswari

சண்டிகரில் 104 வயது தடகள வீராங்கனை

Udhaya Baskar

பள்ளியில் 85% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!

Udhaya Baskar

தமிழகம் வருகிறது தேர்தல் கமிஷன் உயர்மட்டக்குழு

Admin

செல்லிடப்பேசி வாயிலாக கொரோனா பரிசோதனை

Admin

NET 2020 தேர்வுக்கு இலவச பயிற்சி தருகிறது யூனிவர்சிட் ஆஃப் மெட்ராஸ்

Udhaya Baskar

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Rajeswari

கனரா வங்கி மோசடி: ‘யுனிடெக்’ தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு

Udhaya Baskar

Leave a Comment