மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலப் பணிகள் தொடங்கியது – சென்னை மக்கள் மகிழ்ச்சி

Share

கடந்த 10 ஆண்டு காலமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை மதுரவாயல் துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத் திட்டப் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.

சென்னை துறைமுகம் – மதுரவாயல் சாலையில் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு ஈரடுக்கு மேம்பாலம் கட்டும் திட்டமாகும். அதாவது துறைமுகத்தின் 10ம் எண் வாயிலில் தொடங்கும் இந்த மேம்பாலம் கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையோரத்திலும், அதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலை நான்கின் நடுமத்தியிலும் மதுரவாயல் வரை மேம்பாலம் செல்லும்.

இந்தத் திட்டம் ரூபாய் 1815 கோடி மதிப்பீட்டில் 2009 ஆண்டு துவக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிரம்மாண்ட தூண்கள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டது.

வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், கண்டெய்னர் லாரிகள் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு தராமல் துறைமுகம் சென்றடையலாம்.

பொதுவாக இந்த 19 கிலோ மீட்டர் தூரத்தை வாகன ஓட்டிகள் கடக்க ஒரு மணிநேரத்தில் இருந்து 2 மணி நேரம் ஆகும். ஆனால் இந்த திட்டம் நிறைவு பெற்றால் அதிகபட்சம் 20 நிமிடங்களில் இந்த தூரத்தை கடந்துவிடலாம்.

அதுமட்டுமின்றி பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஈவெரா சாலையில் பெருமகளவு போக்குவரத்து நெரிசல் குறையும். இந்தப் பணிகள் 15 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றது. ஆனால் 2011ம் ஆண்டு பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு இச்சாலை திட்டத்தை கிடப்பில் போட்டதால் அந்தப் பணிகள் அப்படியே நின்று போனது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற திரு. ஓ. பன்னீர்செல்வம், இந்த திட்டத்தை சில மாற்றங்களுடன் செயல்படுத்த குழு அமைத்து பரிசீலிப்பதாக அறிவித்திருந்தார். ஆனாலும் பணிகள் தொடங்கியதாக தெரியவில்லை.

தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு தற்போது இந்த பணிகளை மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் சென்னை மக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share

Related posts

குடும்பத் தலைவனை காவு வாங்கிய கருவேப்பிலை ! அரியலூரில் வீதிக்கு வந்த குடும்பச் சண்டை!

Udhaya Baskar

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

மாதர்களுக்கு உகந்த பழம் மாதுளை பழம்

Udhaya Baskar

ஓட்டுக்கேட்டவர்களுக்கு உதவ மனமில்லை ! கண்ணீர் விட்ட பெண்ணுக்கு மிரட்டல் !

Udhaya Baskar

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

Admin

பணத்தாசை காட்டி ஏமாற்றும் செயலிகளை தடை செய்க – இராமதாசு

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Udhaya Baskar

தமிழகத்தில் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு

Admin

“மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்” – திமுக சபதம்

Udhaya Baskar

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்துக ! – இராமதாசு

Udhaya Baskar

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

Leave a Comment