இந்தியாவை கவுரவப்படுத்த மதுரை ரேவதி தயார்!

Share

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அதாவது ஒலிம்பிக்கில் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார் 22 வயதான ரேவதி.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவை கவுரவப்படுத்த தயாராகி விட்டார் மதுரையை சேர்ந்த வீராங்கனை ரேவதி.

ஜூனியர், சீனியர் பிரிவில் மாநில அளவிலான, தேசிய போட்டிகளில் வெற்றிகளை குவித்த ரேவதி தற்போது தமிழகத்திற்கு பெருமை சேர்க்க டோக்கியோவுக்கு செல்கிறார். அதற்கு காரணம் ரேவதியின் பயிற்சியாளர் கண்ணன் அளித்த சிறப்பான பயிற்சியே காரணம் என கூறப்படுகிறது.

தகுதிச்சுற்றில் 400 மீட்டர் தூரத்தை 53.55 வினாடிகளில் கடந்த இலக்கை அடைந்தார் ரேதி

விடுதியில் தங்கி பள்ளிப் பருவத்தை கடந்து வந்த ரேவதி சிறப்பாக ஓடக் கூடியவர் என சக மாணவிகள் புகழாரம் சூட்டியுள்ளனர். ஏன் என்றால் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ரேவதி தன் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தவர். ஷு வாங்க கூட காசு இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வந்த ரேவதி தற்போது டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

காயத்தில் இருந்து விடுபட்டுள்ள ரேவதி தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தயராகி உள்ளார்.

கலப்பு தொடர் ஓட்டத்தில் மதுரையை சேர்ந்த ரேவதி, திருச்சியை சேர்ந்த தனலட்சுமி, சுதா வெங்கடேசன் ஆகிய வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதாவது 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 3 வீராங்கனையும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இதுவரை தமிழகத்தில் இருந்து 11 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Share

Related posts

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன்

Admin

நரிக்குறவர்களின் பசியாற்றும் தாசில்தார் !

Udhaya Baskar

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

ஆய்வுக்கு வந்த மத்திய குழு மீது விவசாயிகள் புகார்

Admin

விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனுக்குடன் செலுத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Admin

டிசம்பர் 13ல் சிஏ தேர்வு நடைபெறுமென அறிவிப்பு

Admin

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு

Admin

கொரோனா பரிசோதனைக்காக பொதுமக்கள் மிரட்டப்படுகிறார்கள் – பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Udhaya Baskar

சோசியல் மீடியாவில் அதிக நேரம்செலவிட்டால் மனசோர்வுக்கு உண்டாகும்

Admin

சென்னை ஐஐடி விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Admin

நீலகிரியில் அதி கனமழை பெய்யும் ! விரைந்தது பேரிடர் மீட்புக் குழு !

Udhaya Baskar

Leave a Comment