முன்ஜாமீன் மனு தள்ளுபடி… கைதாவாரா முன்னாள் அமைச்சர் மணிகண்டன்???

Share

பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து. அமைச்சர் கோரிய முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததுடன், தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை சாந்தினி காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், பணம் பறிக்கும் நோக்கில் நடிகை செயல்படுவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சரின் முன் ஜாமீன் மனு, முந்தைய விசாரணையின் போது, பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாகவும், காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் முன் ஜாமீன் தரக்கூடாது என்றும் காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. காவல் துறையின் கோரிக்கையை ஏற்றும் சாந்தினியின் இடையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அமர்வு, முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து மணிகண்டன் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Share

Related posts

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்

Admin

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

தொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு

Admin

தமிழகத்தில் புதிய மாவட்டமானது மயிலாடுதுறை

Admin

சண்டிகரில் 104 வயது தடகள வீராங்கனை

Udhaya Baskar

முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதலமைச்சர்

Admin

உரிமைக்குழு புதிய நோட்டீஸ்களை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு

Udhaya Baskar

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

மாஃபியா போல் மாறியதா பாலிவுட் சினிமா துறை – கங்கனா ரனாவத்

Udhaya Baskar

தடுப்பூசி போட்டாதான் ரயிலில் அனுமதி; மராட்டிய அரசு அதிரடி

Udhaya Baskar

ஊரடங்கால் பாதித்தோருக்கு நிவாரணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Udhaya Baskar

Leave a Comment