ஒரே நாளில் 3 லட்சம் பேர் வீட்டை இழந்த சோகம் ! அம்மோனியத்தால் ஏற்பட்ட ஆபத்து !

lebonon
Share

லெபனான் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தின் சேமிப்புக் கிடங்கில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட இழப்பில் இருந்து மீள பத்து வருடங்களுக்கும் மேல் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 1985 லிருந்து 2000-ம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் ஏற்பட்ட போர், 2006 ல் ஏற்பட்ட போர், 2007ல் ஏற்பட்ட கலவரம் என்று தொடர்ச்சியாக லெபனான் நாடு பல்வேறு துயரங்களைச் சந்தித்துவருகிறது. கடந்த ஒரு சில வருடங்களாகத் தான் லெபனானில் போர் எதுவும் நடைபெறாமல் அமைதி நிலவி வந்தது.

ஆனால், ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடந்த வந்த போரில் ஏற்படாத துயரம் ஒரேயொரு வெடி விபத்து மூலம் பெய்ரூட் நகரம் 40 ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் இவற்றைக் கட்டியெழுப்ப பத்திலிருந்து இருபது ஆண்டுகள் கூட ஆகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிவிபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 4000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆனால், உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், இதுவரை 1500 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடி மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வெடிவிபத்தால் சுமார் 3 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் வெடிவிபத்தினால் பெய்ரூட் நகரில் மட்டும் 90 சதவிகித மருத்துவமனைகள் மற்றும் உணவகங்கள் இடிந்துவிட்டன. 75 சதவிகித வீடுகள் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதமாகிவிட்டன. பெய்ரூட் நகரில் மட்டும் ஐந்து பில்லி்யன் டாலர் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெய்ரூட் நகரில் எந்தப்பக்கம் திரும்பினாலும் உடைந்த கான்கிரீட் துண்டுகளும், நொறுங்கிய கண்ணாடித் துகள்களுமே காட்சியளிக்கிறது. ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தம் மீட்புக் குழுவை அனுப்பத் தொடங்கியுள்ளன.


Share

Related posts

எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – மகன் மறுப்பு

Udhaya Baskar

கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது- சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

Admin

குவைத் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்

Udhaya Baskar

பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி

Udhaya Baskar

அணையா தீபம்! பெண் உருவத்தில் விநாயகர்! சுசீந்திரத்தில்!

Udhaya Baskar

பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக 2 இடங்கள் தேர்வு

Admin

தைப்பூச விடுமுறை அறிவித்த முதல்வருக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு

Admin

திமுக வார்டு செயலாளர் கத்தியால் குத்திக் கொலை

Admin

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

அண்டார்டிகாவில் டெல்லியை விட 3 மடங்கு பெரிய பரப்பளவு கொண்டத பனிப்பாறை உடைந்தது

Udhaya Baskar

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Admin

மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டார் துரைமுருகன்

Admin

Leave a Comment