கூப்பிட்டால் வருவேன் ! வாக்குறுதி தந்த பெண் கவுன்சிலருக்கு செக்ஸ் டார்ச்சர் !

Share

மக்கள் பிரச்சனைக்காக கூப்பிட்டவுடன் ஓடி வருவேன் என்ற வாக்குறுதி தந்த பெண் கவுன்சிலருக்கு பாலியல் ரீதியாக இளைஞர் ஒருவர் தொல்லை கொடுத்துள்ளார்.

குமரி மாவட்டம், திருப்பதிச்சாரம் ஊராட்சியில் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பெண் ஒருவர் கூப்பிட்ட குரலுக்கு உதவ ஓடிவருவேன் என வாக்குறுதி அளித்து அவருடைய செல்போன் எண்ணையும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவருடைய கணவர் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்து வருகிறார். குழந்தையுடன் தனியாக வசித்து வரும் பெண் கவுன்சிலருக்கு இளைஞர் ஒருவர் அடிக்கடி போன் செய்து பாலியல் ரீதியாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனக்கு செல்போனில் அழைப்பு விடுத்த வன்னியபெருமாள் என்பவரை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும் மீண்டும் அந்த இளைஞர் பெண் கவுன்சிலரை பாலியல் ரீதியாக மிரட்டியுள்ளார். இதை தட்டிக்கேட்ட பெண் கவுன்சிலரின் மாமனாரை அரிவாளால் வெட்ட முயன்றதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வன்னிய பெருமாளை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் வாக்குறுதியாக “கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன்” என செல்போன் எண் கொடுத்த பெண் கவுன்சிலரின் பிரச்சாரம் விஷமத்தனத்தில் முடிந்துள்ளது


Share

Related posts

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

இனி 8 போடாமல் ஓட்டுனர் உரிமம் வாங்கலாம்

Udhaya Baskar

உள்துறை அமைச்சர், ஆளுநர் விரைவில் குணம்பெறவேண்டும் – மு.க.ஸ்டாலின் டிவிட்

Udhaya Baskar

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா?

Udhaya Baskar

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

பாரதிதாசன் பல்கலை. MBA தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது

Admin

சென்னை விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Admin

சிறையில் படித்து 3ம் வகுப்பு பாஸான சசிகலா

Admin

சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கிய பீலா ராஜேஷ் !

Udhaya Baskar

கொரோனா அச்சம் ! ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது !

Udhaya Baskar

Leave a Comment