கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு?

Share

கொரானா நோய்பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்கெட் கடந்த மே 5ம் தேதி மூடப்பட்டது. இதையடுத்து காய்கறி மொத்த விற்பனை திருமழிசைக்கும் பழம் மொத்த விற்பனை மாதவரம் பஸ் நிலையத்திற்கும், பூ மொத்த விற்பனை வானகரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டது.

தற்காலிக சந்தையில் சில்லரை வியாபாரிகள் யாருக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதன் காரணமாக வியாபாரிகள், ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் என 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஒரு சிலர் வாடகைக்கு கடை பிடித்து ஆங்காங்கே வியாபாரம் செய்து வருகின்றனர். திருமழிசையில் காய்கறிகளை பாதுகாக்க போதிய வசதிகள் இல்லாததாலும் தொடர் மழையாலும் காய்கறிகள் வீணாகி வியாபாரிகள் கடுமையாக பொருளாதார இழப்புக்கு ஆளாகினர். எனவே, கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் வியாபாரி சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோயம்பேடு மார்கெட்டை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

koyambedu market

இந்நிலையில் நேற்று காலை சென்னை மேற்கு இணை கமிஷனர் மகேஸ்வரி, அண்ணா நகர் துணை கமிஷனர் ஜவஹர் ஆகியோர் தலைமையில் கோயம்பேடு மார்கெட்டை ஆய்வு செய்தனர். இன்று காலை சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் அங்காடி நிர்வாக குழு அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் மார்கெட்டை ஆய்வு செய்தனர். அப்போது மார்க்கெட் வளாகத்தில் ரூ.2 கோடி செலவில் நடைபெற்று வரும் சாலைகள், கழிவறைகள், நடைபாதை உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் குறித்து என்ஜினீயர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். செப்டம்பர் மாத இறுதியில் காய்கறி மார்க்கெட்டை மட்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Share

Related posts

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

நரிக்குறவர்களின் பசியாற்றும் தாசில்தார் !

Udhaya Baskar

எடப்பாடி பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி

Admin

முதல்வர் விவசாயிகள் நலனுக்காக கடனை ரத்து செய்யவில்லை ! தேர்தல் சுயநலத்திற்காகவே ! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

Udhaya Baskar

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

சு.ஆ. பொன்னுசாமி தாயார் காலமானார் !

Udhaya Baskar

குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் – கமல் உறுதி

Admin

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

குழந்தைகளை குறிவைக்கும் மூன்றாம் அலை??? அரசும், பெற்றோரும் என்ன செய்ய வேண்டும்…

Udhaya Baskar

ஸ்விக்கி ஊழியர் பிரச்சனை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Udhaya Baskar

அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்

Udhaya Baskar

ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Udhaya Baskar

Leave a Comment