பணத்தை மட்டுமே நம்பியதால் அதிமுக தோல்வி – கே.சி.பி. குற்றச்சாட்டு

Share

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பணத்தை மட்டுமே நம்பி போட்டியிட்டதால் அதிமுக தோல்வி அடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற எம்பி கே.சி.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். மேலும் இந்த தேர்தலில் எம்ஜிஆர் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது, அதிமுக மற்றும் எம்ஜிஆர் தொண்டர்கள் புறக்கணிப்பட்டதாலேயே தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் எம்பியும், எம்எல்ஏவுமான கே.சி.பழனிசாமி அவர்கள் தனியார் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அதிமுகவின் தோல்விக்கு ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் பெருமக்கள் காரணமாகிவிட்டதாக தெரிவித்தார். கொங்கு மண்டலத்தில் அதிமுக என்றுமே வலுவாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் அங்கு பதிவான வாக்குகள் ஈபிஎஸ்சுக்காவோ ஓபிஎஸ்சுக்காகவோ அல்ல என தெரிவித்தார். 2016ல் அதிமுக ஆட்சி அமைந்ததற்கான காரணம் கொங்கு மண்டல வெற்றிதான் என கூறிய அவர் வன்னியர் இடஒதுக்கீடு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெற்றி பெறுவதற்கு ஓரளவுக்கு கைகொடுத்துள்ளது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை இயற்றிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வன்னியர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் இருந்தபோதும் தோல்வியை தழுவி உள்ளார். தேர்தல் தோல்விக்கு 10.5 இடஒதுக்கீடு காரணம் என்றால் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரியில் வெற்றி பெற்ற இவர்கள் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தோல்வியை தழுவியது ஏன் என வினவினார்.

எனவே தொண்டர்களை அரவணைத்து, மதித்து கட்சியை வழிநடத்திச் சென்றார்களா என்பதை பார்க்கவேண்டும் என கே.சி. பழனிசாமி தெரிவித்தார். மேலும் சசிகலா ஆதரவுடன் தேர்தலை சந்தித்து இருந்தால் அதிமுகவுக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். அதற்குக் காரணம் அவர் தண்டனை பெற்ற குற்றவாளி அவரை மையப்படுத்தி பிரச்சாரம் செய்தால் நிலைமை மோசமாக இருந்திருக்கும் என தெரிவித்தார். இதற்கு உதாரணம் சசிகலாவை முன்னிலைப்படுத்தி போட்டியிட்ட தினகரன் வெற்றி பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்த கருத்துக்களை கீழ்க்கண்ட வீடியோவில் காணலாம்.


Share

Related posts

முழு காரணமும் இந்தியா தான்! சீனாவின் அறிக்கை

Udhaya Baskar

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் தங்கம்

Rajeswari

2000 ரூபாயை நம்பி ஐந்து வருடத்தை அடகு வைக்க வேண்டாம்

Admin

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பு

Admin

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து!முன்பதிவு செய்துக்கொள்ளலாம்

Udhaya Baskar

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

Admin

பால் முகவர்கள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும் – பொன்னுசாமி

Udhaya Baskar

கடலூர் பயணமாகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Udhaya Baskar

விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: ஸ்டாலின்

Admin

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

Leave a Comment