அரசலாற்றில் அடிப்படை வசதிகள் வேண்டும்! காரைக்கால் மக்கள் கோரிக்கை!

Share

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள அரசலாற்றின் கரையில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசலாற்றின் கரையில் 2 கோடி ரூபாய் செலவில் ஒரு கிலோமீட்டர் துாரத்திற்கு நடைபாதை அமைக்கப்பட்டது. ஆற்றங்கரை பலப்படுத்தப்பட்டு, நடைபாதையில் அழகிய கற்கள் பதிக்கப்பட்டது. ஆனாலும் அரசலற்றுக் கரையை பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக மின்விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

நடைபாதையில் மின்விளக்கு இல்லாததால் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் அந்த பகுதியை மதுக்கூடமாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுவை குடித்துவிட்டு அங்கேயே மது பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர்.

சிலர் அரை குறை உடையுடன் அங்கேயே படுத்து உறங்குகின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பெண்கள் அசௌகரியப்படுகின்றனர். இதனால் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நடைபாதை பொதுமக்கள் பயன்படுத் முடியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் நடைபாதையில் கருவேல மரங்கள், செடிகள் அதிகம் வளர்ந்து, விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

நடைபாதையில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. எனவே அரசு உடனடியாக நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Share

Related posts

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

தங்கம் விலை மேலும் சரிந்தது

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்

Udhaya Baskar

சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கிய பீலா ராஜேஷ் !

Udhaya Baskar

ஓணம் பண்டிகைக்கு லீவுதான்… ஆனா வேலை செய்யணும்…

Udhaya Baskar

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள்

Admin

சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது: முதல்வர்

Admin

சுயநலத்திற்காகவே பொங்கல் பரிசு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Admin

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பல்கலைக் கழகம்

Udhaya Baskar

திருக்கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குக – ஈபிஎஸ்

Udhaya Baskar

Leave a Comment