முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Share

அரியலூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்களின் தாகத்தையும், ஏக்கத்தையும் போக்க அரியலூர் மாவட்டத்தில் சில இடங்களில் கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அரியலூர் மாவட்ட மதுவிலக்கு ஏடிஎஸ்பி திருமேனி தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள முந்திரிக்காடு, ஆர்எஸ் பதி தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மேலவெளி கிராமத்தில் உள்ள வீரனார் கோவில் அருகே ராமசாமி என்பவரின் முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சுவதற்கு மூலப்பொருட்களைக் கொண்டு ஊறல் போடப்பட்டு பூமியில் புதைத்து வைத்துள்ளதை கண்டு பிடித்து விசாரித்தனர். இதையடுத்து மேலவெளியை சேர்ந்த வினோத், மகாதேவன், வெற்றிவேல், தமிழ்ச்செல்வன், செல்வ ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சாராய ஊறலையும் அழித்தனர். போலீசாரின் திடீர் நடவடிக்கையில் அதிர்ச்சி அடைந்த மதுப்பிரியர்கள் தங்களுடைய கைகள் உதறுவதை நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.


Share

Related posts

8 மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள்

Udhaya Baskar

பாஜகவில் இணைந்தார் மநீம பொதுச்செயலாளர்

Admin

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Admin

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் கே.என். நேரு உத்தரவு

Udhaya Baskar

புத்தாண்டு நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது

Admin

கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது- சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

Admin

திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்- ஸ்டாலின்

Admin

ஸ்டாலின் எவ்வளவு முட்டுக்கட்டை போட்டாலும் அதனை முறியடிப்போம் – முதல்வர்

Admin

கக்கன் 112வது பிறந்தநாள் – அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

கொரோனா அச்சம் ! ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது !

Udhaya Baskar

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Udhaya Baskar

கொரோனாவை குணப்படுத்தும் லேகியம்! ஆந்திராவில் இலவசம்!

Udhaya Baskar

Leave a Comment