லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ! சார்பதிவாளர் சஸ்பெண்ட் !

kalavai-sub-registar-office
Share

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சார் பதிவாளர் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ஆனதை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப் பதிவு துறை டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

ஆற்காடு அருகே கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆதிமூலம், 2 ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருகிறார். இந் நிலையில் தனது பூர்விக சொத்தான 10 செண்ட் அளவு வீட்டை, அவரது 3 மகன்களுக்கு எழுதிவைக்க முடிவு செய்தார்.

இதற்காக கடந்த மாதம் 31ம் தேதி கலவை உள்ள சார் பதிவாளர் ரமேஷ் என்பவரை அணுகினார். நிலத்தை அளந்து பதிவு செய்து தர 20 ரூபாய் லஞ்சம் தருமாறு சார்பதிவாளர் ரமேஷ் கேட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் முன் பணமாக 10 ஆயிரம் ரூபாயை இடைத்தரகர் வேலு என்பவர் மூலமாக பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நிலத்தை அளந்த பத்திரப் பதிவு செய்துவிட்ட ரமேஷ் அந்த பத்திரத்தை வாங்கும்போது மீதப் பணத்தை தருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து ரமேஷ் விவசாயி ஆதிமூலத்திடம் பணம் வாங்கும் காட்சிகள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் அலுவலக உதவியாளர், சார் பதிவாளர் ரமேஷ், இடைத்தரகர் வேலு இருந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதையடுத்து ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், அந்த வீடியோவின் ஆதாரம் அடிப்படையில் வேலூர் மண்டல பத்திரப்பதிவு டிஐஜி ஜனார்த்தனன் சார்பதிவாளர் ரமேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.


Share

Related posts

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் சென்னை

Admin

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கா? ஸ்டாலினிடம் அமைச்சர் கேள்வி

Admin

அனைத்து படிப்புகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Admin

ஒரு ரூபா லாபம், 20,000 ரூபா நஷ்டம்; பயணிக்கு பஸ் நிர்வாகம் தண்டம் !

Udhaya Baskar

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன்: கமல்

Admin

ஊரடங்கால் பாதித்தோருக்கு நிவாரணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Udhaya Baskar

தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர்

Admin

டாக்டர் ஆகணும்னா நீட் எழுதியே ஆகணும் ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

Udhaya Baskar

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய தடை விதிப்பு

Udhaya Baskar

Leave a Comment