அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணம்

Share

உலகின் பெரும் பணக்காரரான அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ் அடுத்த மாதம் (ஜூலை) விண்வெளிக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெப் பெசோஸ்,புளூ ஆரிஜின் (‘Blue Origin’) என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இதைத்தொடர்ந்து அன்நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ் வரும் ஜூலை 20ஆம் தேதி அன்று விண்வெளிக்கு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த முதல் பயணத்தில்தான் பெஸாஸ் பயணிக்கிறார்.

அவருடன் அவரது சகோதரர் மார்க் பெஸாஸ் மற்றும் பயணிப்பதற்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவரும் விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர். இந்த ஏலம் வருகிற 12-ந் தேதி நிறைவு பெறுகிறது. இன்நிலையில், 3-வது இருக்கைக்கான ஏலம் தொடங்கியதுமே 143 நாடுகளில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏலம் கேட்டனர். அதில் அதிகபட்சமாக ஒருவர் 2.8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடி) ஏலம் கேட்டது தெரிய வந்துள்ளது.

https://www.instagram.com/p/CP0MSOqnYEo/?utm_source=ig_web_copy_link

இதற்கு முன்னதாக பலமுறை ஆளில்லாமல் பயணித்துள்ள Blue Origin நிறுவனத்தின் New Shepard ராக்கெட்டில் இப்போது ஜெஃப் பெஸாஸ் பயணிக்க உள்ளார். அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் காலத்தில் டவுன் பஸ் போல இந்த தனியார் நிறுவனங்களின் ராக்கெட் மூலம் சாமானியன் விண்வெளிக்கு பயணிக்கின்ற வாய்ப்பு பிரகாசமடைந்து வருகிறது.

பெஸாஸ் விண்வெளிக்கு பயணிக்க உள்ளதை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார். “ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டுமென்ற பெருங்கனவு எனக்கு உள்ளது. அது மிகவும் சாகசம் நிறைந்த ஒன்றாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Rajeswari

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Udhaya Baskar

மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை – ஏர் இந்தியா

Admin

மோடி மஸ்தான் வேலைகள் தமிழகத்தில் பலிக்காது – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கணவன் மனைவி குத்துச் சண்டை! பால்கனி சரிந்து விழுந்தது!

Udhaya Baskar

சென்னையில் மினி கிளினிக் திட்டம் துவக்கம்

Admin

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

போலி நகைகளை மார்வாடிகளிடம் அடகு வைத்தவர் கைது! 21 லட்சம் அபேஸ் செய்தவர் போலீஸ்வசம்!

Udhaya Baskar

ஜேஇஇ முதன்மைத் தேர்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும்

Admin

கடன் தவணை நீட்டிக்க வாய்ப்பில்லை ! இனி ஈஎம்ஐ கட்டியே ஆகவேண்டும்

Udhaya Baskar

150 ஆண்டுகள் சேவை செய்த புளியமரம் ! சூறாவளிக் காற்றில் சுருண்டு விழுந்தது !

Udhaya Baskar

கொரோனா எதிரொலி: ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு

Admin

Leave a Comment