இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Share

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே விமான போக்குவரத்து தொடங்கிய நிலையில், வான்வெளியை பயன்படுத்தி கொள்ள பஹ்ரைனும் அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே தூதரக உறவை ஏற்படுத்த கடந்த 13-ல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திய முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் பட்டியலில் தன்னை சேர்த்து கொண்டது. தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு துறைகளில் இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றிய சட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் உடனடி ரத்து செய்தது. இதன் மூலம் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேரடி விமான சேவை ஆகஸ்ட் 31ல் தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரக கோரிக்கையை ஏற்று இஸ்ரேல் விமானம் தங்கள் வான் பரப்பை பயன்படுத்திக் கொள்ள சவுதி அரேபியா அனுமதி வழங்கி உள்ளது.

இதேபோல், இஸ்ரேல் விமானங்கள் பஹ்ரைன் நாட்டின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதி தர வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்திருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோரிக்கையை பஹ்ரைன் ஏற்றது. இதன்மூலம் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா பட்டியலில் பஹ்ரைனும் சேர்ந்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் மறைமுக உறவை ஏற்படுத்திய நிலையில் பாலஸ்தீனம் கைவிடப்படுகிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.


Share

Related posts

முழு காரணமும் இந்தியா தான்! சீனாவின் அறிக்கை

Udhaya Baskar

மாணவர்களின் புத்தக பை – புதிய அறிவிப்பு வெளியீடு

Admin

யோகா, நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் !

Udhaya Baskar

முதுகுத் தண்டுவடம் பாதித்தோருக்கு மருத்துவ உதவி தேவை!

Udhaya Baskar

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை – கல்வி அமைச்சர்

Admin

கொரோனா வைரஸ் உருமாற்றத்தால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

Admin

கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது- சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

Admin

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு

Admin

மோசடி நபர்களிடம் ஏமாறாதீர் என ரயில்வே எச்சரிக்கை

Admin

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

Leave a Comment