பெங்களுர் அபார வெற்றி, டி வில்லியர்ஸ் அதிரடி: ரசிகர்கள் ஏமாற்றம்

virat kohli rohit sharma
Share

கோலாகலமாக தொடங்கிய 14வது ஐ.பி.எல் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்கொண்ட பெங்களுர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட்டை ரசிக்க அனுமதிக்கப்படாததால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கோடானகோடி கிரிக்கெட் ரசிகர்கள் உலகம் முழுவதும் தங்கள் வீட்டில் இருந்த படியே தொலைக்காட்சியிலும் செல்போனிலும் தங்கள் அபிமான வீரர்களின் விளையாட்டை கண்டு ரசித்தனர்.

பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்ட ஐ.பி.எல் போட்டியின் 14வது சீசன் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரவாரமாக தொடங்கியது. சரியாக இரவு 7 மணிக்கு டாஸ் போட்ட நிலையில் ஆர்.சி.பி அணி டாஸ் வென்று அந்த அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

விராட் கோலி உத்தரவு படி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ரிஸ் லின் 49 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும் எடுத்தனர்.

மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 15 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மும்பை அணி 9 விக்கெட்கைளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அந்த அணியின் ரசிகர்கள் விரக்தி அடைந்தனர்.

பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய பெங்களுர் அணி 8 விக்கெட்களை இழந்து 20 ஓவரில் தன்னுடைய வெற்றியை பதிவு செய்தது. கடைசி பந்து வரை ஆடிய பெங்களுர் அணி ஒரு பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று இரண்டு அணி வீரர்களும் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். எனினும் மிக கவனமுடன் ஆடிய ஹர்ஷல் பட்டேல் ஒரு ரன் எடுத்து பெங்களுர் அணியின் வெற்றியை உறுதி செய்தார். டி வில்லியர்ஸ் 27 பந்துகளில் 48 ரன்களை எடுத்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மும்பை அணியில் பும்ரா மற்றும் மார்கோ ஜன்சன் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

பெங்களுர் அணியில் ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்கள் எடுத்து வீழ்த்தினார்.

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி மும்பையில் இரவு 7.30 நடை பெறுகிறது.


Share

Related posts

புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

Admin

விரைவில் கொரோனா தடுப்பு மருந்து – சுகாதார துறை செயலர்

Admin

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசு திட்டம்? கமல் கடும் விமர்சனம்

Admin

முதல்வர் விவசாயிகள் நலனுக்காக கடனை ரத்து செய்யவில்லை ! தேர்தல் சுயநலத்திற்காகவே ! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

Udhaya Baskar

தேனியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனம்

Admin

பயிரை மேய நினைத்த வேலியை வேரோடு பிடுங்குக – சு.ஆ.பொ.

Udhaya Baskar

கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Udhaya Baskar

டாக்டர் ஆகணும்னா நீட் எழுதியே ஆகணும் ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

Udhaya Baskar

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

சட்டப்பேரவை தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு

Admin

‘கோவாக்சின்’ மூன்றாம் கட்ட பரிசோதனை சென்னையில் துவக்கம்

Udhaya Baskar

டெல்லியில் 4-வது இந்தியா மொபைல் மாநாடு துவக்கம்

Udhaya Baskar

Leave a Comment