சுதந்திர அணிவகுப்பு முடிந்த பின் தந்தைக்கு இறுதிச்சடங்கு – ஆய்வாளருக்கு சல்யூட் !

inspector_mageswari
Share

உடல்நலக்குறைவால் தந்தை இறந்து போன செய்தி அறிந்த காவல் ஆய்வாளர் இறுதிச் சடங்கு செய்யாமல் நாட்டுக்காக சுதந்திர அணிவகுப்பில் பங்கேற்று கடமை ஆற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழடைய செய்துள்ளது.

இந்தியாவில் 74 வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், பாளையங்கோட்டையில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த அணிவகுப்பை தலைமையேற்று நடத்தியது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை காவல் ஆய்வாளரான மகேஸ்வரி.

மகேஸ்வரியின் தந்தை நாராயணசுவாமி நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்ட சொந்த ஊரான திண்டுக்கல் வடமதுரை புறப்பட இருந்தார். ஆனால் சுதந்திர தின நிகழ்ச்சியில் மாற்றம் செய்ய முடியாது என்பதால் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு மரியாதையை நடத்தினார். அணி வகுப்பை முடித்த மகேஸ்வரி பின்னர் தந்தை துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். எந்த வகையிலும் குறைவின்றி அணிவகுப்பு நிகழ்த்திய பிறகுதான் அனைவருக்கும் இந்த செய்தி தெரிந்தது.


Share

Related posts

கொரோனா வைரஸ் உருமாற்றத்தால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

Admin

பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை- மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Admin

சென்னையில் மினி கிளினிக் திட்டம் துவக்கம்

Admin

8 வழிச்சாலை வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Udhaya Baskar

சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Udhaya Baskar

சென்னைதான் எனக்குப் பிடிச்ச ஊரு ! சிஎஸ்கே வீரர் புகழாரம் !

Udhaya Baskar

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு

Admin

கடலூர் பயணமாகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Udhaya Baskar

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

பறவை காய்ச்சல் எதிரொலி: முட்டை விலை குறைவு

Admin

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதான ஆர்ப்பாட்டம்: சமக மகளிர் அணியினர்

Admin

Leave a Comment