இந்தியாவின் முதல் ஏசி ரயில் முனையம் பெங்களூரில் ! பயன்பாட்டுக்குத் தயார் !

Share

இந்தியாவில் முதல் முறையாக 100 சதவீதம் சென்ட்ரலைஸ்ட் ஏசி வசதி கொண்ட ரயில் முனையம் தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிப்படுத்தி உள்ளார். பெங்களூரில் உள்ள இந்த ரயில் நிலையத்திற்கு பாரத ரத்னா விருது பெற்ற சிவில் இன்ஜினியர் சர் எம் விஸ்வேஸ்வரயா பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையம் குறித்து பியூஷ் கோயல் தெரிவித்தவற்றை கீழ்க்கண்ட வீடியோவில் காணலாம்.

சர்வதேச மற்றும் விமான நிலையங்களுக்கு இணையாக நாடு முழுவதும் 123 ரயில் நிலையங்களை மறுவடிவமைக்கும் பணியில் இருந்து ரயில்வே அமைச்சகம் இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக, இந்தியாவின் முதல் மையப்படுத்தப்பட்ட ஏசி ரயில் நிலையமான சர் எம்.விஸ்வேஸ்வரயா டெர்மினல் பெங்களூரில் செயல்படத் தயாராக இருப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ரயில் நிலையத்தில் மேம்பட்ட பயணிகள் வசதிகள், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், அழகான நிலப்பரப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் நிலையங்களை பொதுமக்கள் பயன்படுத்தும்போது விமான நிலையங்களை பயன்படுத்துவது போன்ற அனுபவம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுவடிவமைப்பு நடைபெறும் 123 ரயில் நிலையங்களில் இந்திய ரயில் நிலைய மேம்பாட்டுக் கழகம் 63 நிறுவனங்களிலும், ரயில் நில மேம்பாட்டு ஆணையம் 60 நிலையங்களிலும் செயல்பட்டு வருகிறது. இதற்காக மொத்தம் ரூ. 50,000 கோடி தேவைப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஹபீப்கஞ்ச், குவாலியர், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், நாக்பூர், அஜ்னி, சப்தர்ஜங், புது தில்லி, அயோத்தி, கோமதி நகர், காந்திநகர், சபர்மதி, திருப்பதி, நெல்லுர், டெல்லட், அம்ரிஸ்டர், எர்ணாகுளம், டேராடூன் மற்றும் புதுச்சேரி ரயில் நிலையங்கள் மறுவடிவமைப்பு பணிகளை தொடங்கி உள்ளன.


Share

Related posts

கடன் தவணை நீட்டிக்க வாய்ப்பில்லை ! இனி ஈஎம்ஐ கட்டியே ஆகவேண்டும்

Udhaya Baskar

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Rajeswari

தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – இஸ்ரோ

Admin

புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Udhaya Baskar

ஜல்லிக்கட்டு காளைகளை திருடி விற்கும் கும்பல் கைது

Admin

டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைக்கும் அனுமதியை ரத்து செய்க! – ராமதாசு

Udhaya Baskar

விரைவில் திமுக ஆளுங்கட்சியாக மாறும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

Admin

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Rajeswari

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை

Udhaya Baskar

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

Leave a Comment