இறுதிச் சடங்கில் இளையராஜா இசை வேண்டும் – இறுதி ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்

Share

காதல், சோகம், அழுகை, மனஅழுத்தம், சந்தோஷம் என வாழ்க்கையின் எல்லா காலக் கட்டங்களிலும் நம்மை ஆற்றுப்படுத்தி கரை சேர்ப்பதின் மூலம் செவிகளின் வழியே நம் மனதுக்குள் நுழையும் ஆக்ஸிஜன் தான் இளையராஜாவின் இசை.

யாரிடமாவது `இளையராஜாவின் இசையில் நீங்கள் உணரும் தனித்தன்மை எது?’ என்று கேட்டால், சிலரிடமிருந்து கண்ணீர் பதிலாக வருகிறது!

சிலர் “என்னுடைய அம்மாவின் மடியில் நான் தலை வைத்துப் படுத்திருக்கும் உணர்வைத் தருகிறது..” என்கின்றனர்.

சிலர் மன அழுத்தத்தை குறைக்கிறது என்று சொல்கின்றனர். இதுபோல் இளையராஜாவின் இசையில் லயிக்கும் பலரிடமிருந்து பல விதமான உணர்வு அலைகள் நம்மை மூழ்கடிக்க்கும்.

அவரின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது. அப்படி தீவிர இளையராஜாவின் இசை பக்தனான ஒருவர் தனது இறுதிச்சடங்கின்போது தான் இறந்த பின், தனது இறுதி சடங்கில் இளையராஜாவின் இசையை பாடி தாலாட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டு இறந்துவிட்டார். அவரது விருப்பப்படியே அவரது நண்பனின் அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றி உள்ளனர்.

அதாவது நண்பர்கள் அனைவரும் அமர்ந்து இளையராஜாவின் பாடல்களை வாத்தியங்களுடன் இசைக்கின்றனர். உறவினர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த வீடியோ எந்த ஊரில் எடுக்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால் இன்று உலகெங்கும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த இளைஞனின் ஆசை நிறைவேறியதால் நிச்சம் அவரது ஆத்மா சாந்தி அடைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Share

Related posts

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு?

Udhaya Baskar

விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: ஸ்டாலின்

Admin

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

பணம் கட்டிட்டா பாஸா? அதெல்லாம் முடியாது ! ஏஐசிடிஇ கெடுபிடி !

Udhaya Baskar

அண்டார்டிகாவில் டெல்லியை விட 3 மடங்கு பெரிய பரப்பளவு கொண்டத பனிப்பாறை உடைந்தது

Udhaya Baskar

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்

Admin

தேனீர், சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டும் – பால் முகவர்கள் சங்கம்

Udhaya Baskar

“இனி கோயில்களில் தமிழில் அர்ச்சனையா..!?”

Udhaya Baskar

2021 ஜனவரியில் ஜெயலலிதா நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும்- பொதுப்பணித்துறை

Admin

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை !

Udhaya Baskar

கிராம சபை கூட்டங்களுக்கு தடை

Admin

Leave a Comment