வாக்குறுதி நிறைவேற்றிவிட்டேன்! வாழ்த்துவீர்களா தலைவரே! – MKS

Share

‘உங்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்வதற்காக தலைநிமிர்ந்து வருகிறேன்’ நீங்கள் வாழ்த்துவீர்களா தலைவரே என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் ஜூன் 3ல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில், தனது குரலில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

”திருவாரூரில் கருவாகி தமிழகத்தையே தனது ஊராக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவர்; முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர். முத்தமிழ் கலைஞர் அவர்களே, இன்று ஜூன் 3 உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல, உயிரினும் மேலான கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள். அதனால்தான் கழகத்தின் கண்மணிகளாம் கருப்பு சிவப்பு தொண்டர்கள் அனைவருக்கும் தனித்தனி பிறந்த நாட்கள் இல்லை. எல்லோருக்கும் பிறந்தநாள் இந்த ஜூன் 3.

வங்கக் கடலோரம் வாஞ்சைமிகு தென்றலின் தமிழ் தாலாட்டில் உங்கள் கண்ணான அண்ணனாம் பேரறிஞருக்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் எனது ஆரூயிர் தலைவரே, இந்த ஜூன் 3 நான் கம்பீரமாக வருகிறேன். உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன்.

நீங்கள் மறையவில்லை. மறைந்திருந்து என்னை கவனிப்பதாகத்தான் எப்போதும் நினைப்பேன். கோட்டையை கைப்பற்றிய அடுத்த நாளே கொரோனாவை விரட்ட போராடிக் கொண்டிருக்கிறோம். உழைப்பு உழைப்பு உழைப்பு என்று நீங்கள் உருவகப்படுத்தினீர்கள். அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் சொல் எனக்கு சாசனம்; உங்கள் வாழ்க்கை எனக்கு பாடம்; உங்கள் பாராட்டே எனக்கு உயிர்விசை; உங்கள் குரலே எனக்கு தேனிசை. உங்களது வார்ப்பான நான் இந்த ஜூன் 3, உங்களை வெற்றிச் செய்தியோடு சந்திக்க வருகிறேன். வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே?”

என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.


Share

Related posts

மருத்துவமனையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி!

Udhaya Baskar

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

சாதாரண மக்கள் திமுக-வில் பதவிக்கு வரமுடியாது: முதல்வர்

Admin

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரோனா

Admin

முதுகுத் தண்டுவடம் பாதித்தோருக்கு மருத்துவ உதவி தேவை!

Udhaya Baskar

சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது: முதல்வர்

Admin

கேசவானந்த பாரதி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

குறிப்பிட்ட முக்கிய மருந்துகளுக்கு ‘ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு’

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Admin

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தையே இருக்காது – சீமான்

Admin

Leave a Comment