குழந்தைகளை குறிவைக்கும் மூன்றாம் அலை??? அரசும், பெற்றோரும் என்ன செய்ய வேண்டும்…

Share

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், பிரிட்டன், காங்கோ உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இன்னும் 6-8 மாதங்களுக்குள் மூன்றாம் அலை வரலாம் எனக் கணித்திருக்கிறது. உலக நடப்புகளும் அதை உறுதிசெய்கின்றன. உலகில் கொரோனா 3 அலைகளையும் முதலில் கண்ட நாடு அமெரிக்கா. அங்கு இரண்டாம் அலைக்குப் பிறகு 4 மாதங்கள் கழித்து மூன்றாம் அலை தாக்கியது. இங்கிலாந்தில் 8 மாதங்கள் கழித்து இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. மூன்றாம் அலைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளும் தப்பவில்லை.

கொரோனா மூன்றாம் அலை பாதிப்பில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன. அடுத்து வரும் மூன்றாம் அலையிலும் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்குச் சான்றாக அமெரிக்காதான் உள்ளது. அங்கு முதல் அலையில் 3% குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். மூன்றாவது அலையில் 22% குழந்தைகள் பாதிப்படைந்துள்ளனர். இதுதான் மூன்றாம் அலை எச்சரிக்கைக்கு முக்கியக் காரணம். மேலும், முதல் அலையில் முதியோரும் இரண்டாம் அலையில் இளையோரும் பாதிக்கப்பட்டனர். ஆகவே, அடுத்த அலையில் அது குழந்தைகளைக் குறிவைக்கலாம்; உயிர்வாழ இடம் மாறும் வேறு உருமாற்றம் அடைவது கொரோனாவின் இயல்புதான் இதற்குக் காரணம்.

கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில், பெருந்தொற்றுக் காலத்தில், மூன்றாம் அலை பரவுவது புதிதல்ல. 1918-ல் உலகையே அச்சுறுத்திய ஸ்பானிஸ் ஃபுளு 3 அலைகளைக் கொண்டது மட்டுமல்லாமல், மூன்றிலும் அதன் பரவும் தன்மையும் வேறுபட்டிருந்தது. மூன்றாம் அலையில் குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போதும் பொதுச் சமூகம் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து அதைக் கடந்துவந்தது. இப்போது பேசுபொருளாகியுள்ள கொரோனா மூன்றாம் அலை பற்றிய அறைகூவலும் அதே எச்சரிக்கை உணர்வுடன் அரசுகளையும் சமூகத்தையும் தயார்ப்படுத்தவே முன்னெடுக்கிறது.

இந்தியாவில் முதல் அலையின்போது, குறைவான குழந்தைகளே பாதிப்படைந்தனர். தற்போதைய இரண்டாவது அலையில் குழந்தைகள் பாதிப்பது அதிகரித்துள்ளது. முதல் அலையில் நோய் அறிகுறிகள் இல்லாமல் குழந்தைகள் தொற்றுக்குள்ளாகிவந்த நிலையில், இரண்டாம் அலையில் காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, மூக்கொழுகல், வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இனி மூன்றாம் அலை தாக்கினால், குழந்தைகளுக்கு அது மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிற அளவுக்குத் தீவிரத் தொற்றாக மாறலாம். அப்போது ஒரே நேரத்தில் நிறைய குழந்தைகளுக்குத் தீவிரச் சிகிச்சையும் தேவைப்படலாம். அது பொதுச் சுகாதாரத் துறைக்குப் பெரும் சவாலாக அமையும். இதுதான் தற்போதைய பதற்றத்துக்குக் காரணம்.

இதனால் இந்தியாவில் மரபணு வரிசைப் பரிசோதனைகளை அதிகப்படுத்தி ஆல்பா, டெல்டா வேற்றுருவ வைரஸ்களோடு வேறு புதிய கொரோனா வைரஸ்களும் பரவுகின்றனவா என்பதை அறிந்தால் மட்டுமே மூன்றாம் அலை எப்போது வரும் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும் என்கின்றனர், துறைசார் வல்லுநர்கள். ஒருவேளை, ‘சூத்ரா’ கணித்திருப்பதுபோல் மூன்றாம் அலை வந்து குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கினால், நாட்டில் தற்போதுள்ள குழந்தைகளுக்கான மருத்துவக் கட்டமைப்புகளால் கொரோனாவை வெற்றிகொள்ள முடியாது.

மேலும், குழந்தைகளுக்கென்றே தேவைப்படும் படுக்கைகள், அவசரச் சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், குரல்வளை நோக்கி, இன்குபேட்டர், வெப்பக்கருவி, பல்ஸ் ஆக்ஸிமீட்டர், நெபுலைசர் போன்ற கருவிகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள் என மருத்துவக் கட்டமைப்புகளை இப்போதிருந்தே வலுப்படுத்துவதும் (பச்சிளம்) குழந்தை மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் அதிகப்படுத்துவதும் முக்கியம். இந்த மேம்பாடுகள் பெருநகரங்களோடு நின்றுவிடாமல், கிராமப்புற, வட்டார மருத்துவமனைகளையும் எட்ட வேண்டும்.

பெற்றோரிடமிருந்துதான் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவுகிறது என்பதால், தொற்றில் இருந்து பாதுகாக்க பெற்றோர்கல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் ஊரடங்கால் தான் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு பரவும் தன்மை மிக அதிகம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகிலேயே முதல் நாடாக கனடா 12 – 15 வயதுள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசியைச் செலுத்தத் தொடங்கியது. தற்போது அமெரிக்கா, இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, சிங்கப்பூர் எனப் பல்வேறு நாடுகளும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துகின்றன. இந்தியாவும் இதைப் பின்பற்ற வேண்டும். ‘கோவேக்சின்’ தடுப்பூசியை 2 – 18 வயதுள்ள இந்தியக் குழந்தைகளுக்குச் செலுத்திப் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளதை இதற்கு முன்னோட்டமாகக் கருதலாம். ஆனாலும், இதற்கான செயல்திட்டத்தை இப்போதே முறையாகத் தயாரித்து, தடுப்பூசி உற்பத்தியை விரிவுபடுத்தி, தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியமான அம்சம். கொரோனா இரண்டாம் அலை நமக்குக் கற்றுக்கொடுத்த இந்தப் பாடத்தை அரசுகள் மறந்துவிடக் கூடாது.

பெற்றோருக்கு இதையும் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் பெற்றோருக்குத் தயக்கமும் அச்சமும் ஏற்படலாம். பொதுச் சமூகத்தின் முக்கிய அங்கமான பெற்றோரின் பங்களிப்பு இல்லாமல் கொரோனாவிலிருந்து நாம் விடுபட முடியாது என்பதை அரசு அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

தடுப்பூசி போடுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவையே, கொரோனாவை தடுக்கும் ஆயுதம் என்பது, ஒட்டுமொத்த மருத்துவர்களின் அறிவுரை ஆகும். இவை பின்பற்றினால் மூன்றாம் அலையை அடக்கிவிடலாம்.


Share

Related posts

தேனியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனம்

Admin

வாக்குறுதி நிறைவேற்றிவிட்டேன்! வாழ்த்துவீர்களா தலைவரே! – MKS

Udhaya Baskar

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று

Admin

எனக்கு பழைய கார்தான் வேண்டும் ! ரசிகர்களிடம் உதவி கேட்கும் சச்சின் !

Udhaya Baskar

அரசு அதிகாரி வீட்டில் ரெய்டு கோடிக்கணக்கான பணம் பறிமுதல்

Admin

உயர்ந்தது சிலிண்டர் விலை… பொதுமக்கள் அதிர்ச்சி…

Admin

தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்: தமிழிசை உறுதி

Admin

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை: ராதாகிருஷ்ணன்

Admin

ஏடிஎம்ல துட்டு இல்லன்னா, எங்களுக்கு டப்பு கொடுக்கணும் – ரிசர்வ் வங்கி கொட்டு

Udhaya Baskar

பிஎஃப் தகவல்களை UMANG செயலி வாயிலாக எப்படி பெறுவது?

Admin

தாயின் சொத்தை அபகரித்த ஊர்க் காவலன் ! வீட்டை இழந்து வீதிக்கு வந்த தாய் !

Udhaya Baskar

அரசலாற்றில் அடிப்படை வசதிகள் வேண்டும்! காரைக்கால் மக்கள் கோரிக்கை!

Udhaya Baskar

Leave a Comment