பருப்பு இல்லாமல் வடை சுடுவது எப்படி ?

Share

கடலைப் பருப்பு அல்லது உளுத்தம் பருப்பை ஊறவைத்து மாவு அரைத்து அதன் பின்புதான் வடை சுட முடியும். இப்படி இருக்கையில் நினைத்தவுடன் பத்தே நிமிடத்தில் வடை செய முடியுமா ? அதுவும் மொறுமொறுப்பாக. உங்களுடைய வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சுவையான சிம்பிளான இந்த ரெசிபியை செய்யலாம்.

அப்படி ஊற வைக்காமல், அரைக்காமல் வடை சுடுவது எப்படி ? சரி வாங்க அந்த ரெசிபியை இப்பவே தெரிந்துகொள்ளலாம்.

ஒரு அகலமான பாத்திரத்தில் 1 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சூடானதும் 100 கிராம் சேமியாவை அந்த தண்ணீரில் போட்டு சேமியா வெந்ததும், உடனே அந்த தண்ணீரில் இருந்து சேமியாவை எடுத்து, தண்ணீரை வடித்து தனியாக வைத்து ஆற விடவேண்டும்‌. சேமியா ரொம்பவும் சுடுதண்ணீரில் குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பின் ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 1 கைப்பிடி அளவு பொட்டுக்கடலை, முந்திரி பருப்பு 10 லிருந்து 15, இந்தப் பொருட்கள் அனைத்தையும் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்தது ஆறிய சேமியாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொண்டு, சேமியா உடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பொடி, இஞ்சி துருவல் 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி தழை சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, தேவையான அளவு உப்பு, அரிசி மாவு 4 டேபிள் ஸ்பூன் அளவு இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சேமியாவை ஒரு பெரிய அளவு ஸ்பூனை கொண்டு கிலர வேண்டுமே தவிர, கையை கொண்டு பிசைந்து விடக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் இந்த மாவை பிசைந்து விடாதீங்க.

மாவு வடை போடும் பதத்திற்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, கொஞ்சமாக அரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம். கையில் கொஞ்சம் எண்ணெயை தடவிக் கொண்டு இந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக கையிலெடுத்து உருண்டை பிடித்து உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து மசாலா வடை போல எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.

எண்ணையில் போட்ட உடனேயே கரண்டியை வைத்து திருப்பி விடாதீர்கள். ஒருபக்கம் நன்றாக சிவந்தவுடன் மீண்டும் திருப்பி மறுபக்கமும் பொன்னிறம் வந்த பிறகு எண்ணெயை நன்றாக வடித்து எடுத்து பரிமாறினால் சூப்பரான சேமியா வடை, மொறுமொறுவென தயாராகியிருக்கும். டீ போடும் சமயத்தில் சட்டென்று பத்து நிமிடத்தில் இந்த வடையை நீங்கள் தயார் செய்து விடலாம்.


Share

Related posts

ஆந்திரா சமையல் 2 – தேங்காய் வெல்லம் போளி (கொப்பரக்காய பெல்லம் போளி)

Udhaya Baskar

பச்சைப்பயறு, பூண்டு சேர்த்து துவையல்?

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

ஆந்திரா சமையல் 1 – பிரண்ட துவையல் (நல்லேரு ஊர்ப்பிண்டி)

Udhaya Baskar

Leave a Comment