சிறந்த உணவும், சிறந்த விந்தணுவும்

Share

ஆரோக்கியமாக வாழ்க்கையக்கு இன்பம் மற்றும் துன்பத்திற்கு மட்டுமல்ல சிறப்பான உணவு பழக்க வழக்கங்களே அடிப்படை என்பது பல்வேறு ஆராய்ச்சிகள் கூறும் உண்மை. அதேபோல், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும், அவர்களின் உணவு பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது.

உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். ஆண்களுக்கு இன்று இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று, விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறைபாடு
தான். உணவே மருந்து என்ற முதுமொழி ஒருபுறம் என்றால், எதை உணவாக உடலில் விதைக்கின்றோமோ, அதுவே விந்தணுவின் தரமாய் வெளிவருகிறது என்று புதுமொழி சொல்கிறது.

பூசணி விதைகளில் விந்தணுவை அதிகரிக்கச் செய்யும் துத்தநாகம் இருக்கிறது. இது ஆண்களின் விந்தணுக்களின் வீரியமான இயக்கத்தையும் தரத்தையும், டெஸ்டோஸ்டிரோனையும்
(testosterone) அதிகரிக்கும். எனவே, பூசணி விதையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டும், உங்கள் நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க தேவையான இரண்டு முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

வைட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுப் பொருட்கள், விந்தணுக்கள் உருவாக்கத்திற்கும், அதன் தரத்திற்கும் பக்கத்துணையாக இருப்பவை. வைட்டமின் சி ஆனது, அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படும். இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இதன் பொருள் என்னவென்றால், வைட்டமின் சி முதலில் தண்ணீரில் கரைந்து, பின்னர் நம் உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது தான். இருப்பினும், நம் உடல் ஆனது, இந்த வைட்டமினை சேமிக்காது; எனவே, தினமும் நாம் உண்ணும் உணவில் இருந்து இதை எடுத்துக் கொள்வது நமக்கு மிகவும் முக்கியம். எனவே, ஆரஞ்சு உட்பட வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

ஆழ்ந்த பச்சை நிறமுள்ள காய்கறிகளில் வைட்டமின் பி இருக்கும். வைட்டமின் பி என்பது கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின்களின் குழு. இது 8 சேர்மங்களின் குழு ஆகும். வைட்டமின் பி சைவ உணவு உண்பவர்களுக்கு சற்று அதிகமாக கிடைக்கும். இந்த வைட்டமின் பி சேர்மங்களில் குறைபாடு இருந்தால் அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்க கூடும்.

வைட்டமின் பி1 தயமின், வைட்டமின் பி 2 ரைபோஃப்ளேவின், வைட்டமின் பி 3 நியாசின், வைட்டமின் பி 5, வைட்டமின் பி 6 பைரிடாக்ஸின், வைட்டமின் பி 7 பயோட்டின், வைட்டமின் பி 9 ஃபோலேட் வைட்டமின் பி 12 கோபாலமின் போன்றவை அடங்கியுள்ளது. இந்த எட்டும் சேர்ந்து பெறப்படும் உயிர்ச்சத்து வைட்டமின் பி ஆகும்.

மேலும் வைட்டமின் பி ஆண்மையை அதிகரிக்க வல்லது. மாதுளம்பழத்தில் இருக்கும் ஆண்டிஆக்சிடெண்ட், டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் நீரீன் அளவு சரிவர பராமரிக்கப்பட்டால், விந்தணுக்கள் இயல்பாக இருக்கும்.


Share

Related posts

கால்நடை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் டிசம்பர் 23ம் தேதி துவக்கம்

Admin

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

Udhaya Baskar

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்

Udhaya Baskar

புதிய அமைச்சர்களின் இலாக்காக்கள் விவரம்

Udhaya Baskar

தக்காளி வேனில் மதுபானம் கடத்தல்! போலீஸ் ரெய்டில் சிக்கியது!

Udhaya Baskar

தொரகா ரண்டி அன்னைய்யா ! கமல் டிவிட் !

Udhaya Baskar

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா?

Udhaya Baskar

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

இந்த படம் எல்லாம் நேரடியா OTT’ல வருதா!!!

Udhaya Baskar

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரோனா

Admin

கான்கிரீட் காடுகளிலும் வளரும் மூலிகை செடிகள்!!!

Udhaya Baskar

Leave a Comment