கான்கிரீட் காடுகளிலும் வளரும் மூலிகை செடிகள்!!!

Share

வீட்டில் சிறிய இடங்களில் எளிதில் வளரக்கூடிய மூலிகை செடிகளும் அதன் பயன்களும் ஒரு பார்வை.

வீடுகள் என்ற பெயரில் உலகம் முழுவதும் கான்கிரீட் காடுகளாக மாறிவரும் சூழலில், அந்த காட்டுக்குள் எளிதில் வளரும் மூலிகை செடிகள். என்னென்ன செடிகள் அது? அவற்றின் மருத்துவப் பயன்கள் என்ன? அவை எவ்வாறு உதவும் என்பதை பார்க்கலாம்.

ஸ்மார்ட் சிட்டி, சிட்டி, டவுன், பேரூராட்சி என வீட்டை ஒட்டிய வீடுகளில் நெருக்கடியான இடங்களில் வசிப்பவர்கள், இயன்ற இடத்தில் தொட்டிகளில் மூலிகை செடிகளை வளர்க்கலாம். ஃபிளாட் சிஸ்டத்தில் இருப்பவர்கள், வீட்டின் முன்புறமோ அல்லது ஃபிளாட் அசோசியேஷன் மூலம் மாடித்தோட்டமாகவோ மூலிகைச் செடிகளை வளர்க்கலாம்.

அவைகள், செம்பருத்தி, கீழாநெல்லி, கற்பூரவள்ளி, கற்றாழை, பிரண்டை, பவழமல்லி, நிலவேம்பு இவைகள் அனைத்தும் எளிதில், சிறிய இடங்களிலேயே வளரக்கூடிய மூலிகை செடிகள்.

இப்போது இவைகளின் குணங்களை பார்க்கலாம்

செம்பருத்தி;

உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் ரத்த ஓட்டம் தடையின்றி நடைபெற செம்பருத்திப் பூ உதவுகிறது. செம்பருத்தி பூக்கள் ஐந்தை எடுத்து, அதை சுத்தமான 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை நான்கில் ஒரு பங்காக சுண்டச் செய்து, காலை, மாலை அருந்தி வர ரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.

அதேபோல், செம்பருத்தி பூக்கள் ஐந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் ஊற வைக்கவும். பின்னர் அந்த எண்ணெயை நன்றாக சூடு செய்து தினமும் தலையில் தேய்த்துவர, தலைமுடி கறுகறுவென அடர்த்தியாக வளரும். இதுபோன்று ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியதுதான் செம்பருத்தி.

கீழாநெல்லி;

மஞ்சள் காமாலை நோயை முற்றிலும் குணப்படுத்தும் அரிய மூலிகையாக சித்த மருத்துவம் கீழா நெல்லியை

பரிந்துரைக்கிறது. இதன் வேரை நன்றாக அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து, நெல்லிக்காய் அளவு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை நோய் குணமாகும். இதேபோல் கீழா நெல்லி இலையை சுத்தமான பசும்பாலுடன் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.

கற்பூரவள்ளி;

வீடுகளில் சின்ன தொட்டிகளில் வளர்க்க ஏதுவான மூலிகை இது. இவற்றின் இலைகளை நீராவியில் வேகவைத்து, அதிலிருந்து வெளிவரும் சாற்றை 5 மில்லி அளவுக்கு அருந்தி வர, சுவாசக் கோளாறை உண்டுபண்ணும் மார்புச்சளி நீங்கும். மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளி மார்பில் கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை
5 மில்லி அளவுக்கு அருந்தி வர, சுவாசக் கோளாறை உண்டுபண்ணும் மார்புச்சளி நீங்கும். மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளில் மார்பில் கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை தடவினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

கற்றாழை;

கண் திருஷ்டிக்காக கற்றாழையை வீடுகளில் வளர்ப்பார்கள். உங்கள் வீட்டில் வளர்த்தால் கொசுக்கள் வராமல் இருக்க இது உதவுகிறது. மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாமலே இருக்கிறது. உடல் சூட்டைக் குறைத்து, தூக்கமின்மையை சரி செய்யும் வல்லமை கற்றாழைக்கு உள்ளது. இதன் சதைப் பகுதியை 10 கிராம் அளவு எடுத்து நன்றாக சுத்தம் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

சரும நலன், கூந்தல் ஆரோக்கியத்துக்கும் கற்றாழை பயன்படுகிறது. ஆண்களின் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் குணமும் இதற்கு உண்டு. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நமது உடம்பு வயதாகுவதை தடுக்கிறது. நீங்கள் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடிபட்ட மற்றும் வெட்டப்பட்ட காயங்கள் மற்றும் தீ காயங்கள் போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக இது பயன்படுகிறது.

பிரண்டை;

பிரண்டையின் மருத்துவ குணம் அறிந்து, நமது முன்னோர் அதை சட்னியாக செய்து சாப்பிடும் வழக்கம் வைத்திருந்தனர். கிராமப்புறங்களில் இப்போதும் இந்த வழக்கம் காணப்படுகிறது. பிரண்டையின் தோலைச் சீவி உள்ளே காணப்படும் சதைப்பகுதியுடன் தேவையான புளி சேர்த்து வேக வைக்க வேண்டும். இந்தக் கலவையை வாரத்தில் 2 நாட்கள் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமை பெறும். நாக்கின் சுவையின்மை நீங்கும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்யும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது நிவாரணம் தரும்.

பவழமல்லி;

இரவில் மலர்ந்து மனம் பரப்பும் தன்மை கொண்டதுதான் இந்த பவழமல்லி. குளிர்காலத்தில் இந்தப் பூக்கள் அதிகம் பூக்கும். தேவலோகத்தில் இருந்து இந்த மலர் கிருஷ்ணரால் வரவழைக்கப்பட்டது என்பது ஐதீகம். இதன் இலையைச் சாறாகப் பிழிந்து 5 மில்லி என்ற அளவில், காலை, முற்பகல், மதியம், பிற்பகல், மாலை, இரவு என 6 வேளை அருந்தி வந்தால், ரத்த தட்டணுக்கள் குறைபாடு நீங்கும். வைரஸ் காய்ச்சலால் அவதிப்படுவோருக்கு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நிலவேம்பு;

அலோபதி மருந்துகளுக்கு சவால்விட்டு, டெங்கு, பன்றிக்காய்ச்சல் எனப் பல காய்ச்சல்கள் காப்பாற்றியது. இப்போதும், டெங்கு, கொரோனா போன்ற தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு கஷாயம் கைகொடுக்கிறது. இதன் இலைகளை நிழலில் உலர்த்தி, வெந்நீரில் ஊற வைத்து தினமும் 2 கிராம் அளவுக்கு காலை மற்றும் மாலை உண்டு வந்தால், உடல் வலி குணமாகும்.

கொசுக்களால் புதிய காய்ச்சல்கள் அதிகரித்து வரும் சூழலில், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மூலிகை நிலவேம்பு.

இந்த மூலிகை செடிகள் எல்லாம் பாட்டி வைத்தியத்துக்கு பயன்படுத்தி அதன் மூலம் முன்னோர்கள் பயன் அடைந்துள்ளனர். இந்த மூலிகைகளை வீட்டு வைத்தியங்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால், மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும்.


Share

Related posts

சென்னையில் காலை 7 மணி முதலே முதல் மெட்ரோ ரயில் – QR டிக்கெட் அறிமுகம்

Udhaya Baskar

பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் ரெய்டு

Admin

திருக்கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குக – ஈபிஎஸ்

Udhaya Baskar

43 ஆயிரத்துக்கு மேல போறீயே தங்கமே தங்கம் !

Udhaya Baskar

மலைவாழ் மக்களுக்கு மளிகைப் பொருட்கள்!

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.320 குறைந்தது

Udhaya Baskar

பாலிவுட் பிரபலத்திற்கு புற்றுநோய் ! ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

சிவில் சர்வீஸ் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு?

Admin

திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்- ஸ்டாலின்

Admin

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Rajeswari

Leave a Comment