ஆன்லைனில் சரக்கு! “குடி”க்கும் மகன்கள் மகிழ்ச்சி

Share

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வாட்ஸ் அப் குழு வாயிலாக மதுவிற்பனை அமோகமாக நடந்து வருவதாக புகார்.

வாணியம்பாடியில் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து வாட்ஸ் அப்பில் ‘சரக்கு’ என்ற குழுவை ஆரம்பித்து, அதன் மூலம் 1500 க்கும் மேற்பட்டோருக்கு மது விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. வெளிமாநில மதுபானங்கள், கள்ளச்சாராயம் உட்பட அனைத்துமே இதில் சலுகை விலையில் கிடைக்கிறதாம்.

மதுபானம் தேவையென்றால் சம்பந்தப்பட்ட நபர் வாட்ஸ் அப் குரூப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலம்பதிவு செய்வார். அதற்க்கு உடனடியாக குரூப் அட்மின் தங்களிடம் இருக்கும் மதுபானங்கள் மற்றும் அதன் விலையை வாய்ஸ் மெசெஜ் செய்வார்.

தேவைப்படும் மதுபானத்தை ஆர்டர் செய்ததை தொடர்ந்து குரூப் அட்மின் மதுபானத்தை ஒப்படைக்க குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்வார். அதன் பின்னர் மதுபானங்கள் வேண்டிய நபர் டெலிவரி பிக்கப் பாயிண்ட்யில் வந்து பெற்றுக்கொள்வார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முறைகேடாக மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்களை காவலர்கள் கைது செய்து வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் கள்ளச்சந்தையில் விற்கமுயன்ற 5000த்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரயில், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் கொண்டு வந்து மது விற்பனை செய்த 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸ் மூலம் மதுவிற்பனை நடைபெறுவதால், காவல்துறையினர் அவர்களை பிடிக்கத் திணறி வருவதாகச் கூறப்படுகிறது.


Share

Related posts

இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

வேலியே பயிரை மேய்ந்த கதை ! இளையராஜா கைது!

Udhaya Baskar

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

தேர்தல் செலவுகள் வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்

Admin

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Rajeswari

புதிதாக உருவாக்கப்படும் மனை பிரிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

Admin

சாதாரண மக்கள் திமுக-வில் பதவிக்கு வரமுடியாது: முதல்வர்

Admin

தமிழகத்தில் திறந்தவெளி கூட்டங்கள் நடத்த அனுமதி

Admin

தமிழகம் வருகிறது தேர்தல் கமிஷன் உயர்மட்டக்குழு

Admin

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Udhaya Baskar

சொத்து வரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணம் -சென்னை மாநகராட்சி

Admin

Leave a Comment