Hatsun ஆலையில் அம்மோனியா கசிவு, சுருண்டு விழுந்த தொழிலாளர்கள் ! துணை முதலமைச்சர் அதிர்ச்சி

Share

ஆந்திர மாநிலத்தில் தனியார் பால் நிறுவனத்தில் அம்மோனியா வாயு கசிந்ததால் தொழிலாளர்கள் சுருண்டு விழுந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், புத்தாலப்பட்டு அருகே உள்ளது எம்.பண்டப்பள்ளி கிராமம். இங்கே ஹட்சன் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை இரவு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிபுரிந்து வந்தனர். அப்போது அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் 20 தொழிலாளர்கள் மயங்கி சுருண்டு விழுந்தனர்.

மயங்கி விழுந்த அனைவரும் அருகில் உள்ள சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் நாராயண் பாரத் குப்தா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், அம்மோனியா செல்லும் குழாயை வெல்டிங் செய்தபோது வாயு கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் அங்கிருந்த பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை வழங்க அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் தகவல் அறிந்த ஆந்திர மாநில துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி மாவட்ட ஆட்சியர் மட்டும் காவல் கண்காணிப்பாளரிடம் கள நிலவரம் கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.


Share

Related posts

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

புதிதாக உருவாக்கப்படும் மனை பிரிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

Admin

பாஜகவில் இணைந்தார் மநீம பொதுச்செயலாளர்

Admin

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை விளக்கம்

Admin

தங்கம் விலை ரூ.288 குறைந்தது

Udhaya Baskar

மக்களுக்காக ரஜினியுடன் இணைய தயார் – கமல்ஹாசன்

Admin

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 75% குறைவு: சுகாதாரத் துறை

Admin

சொத்து வரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணம் -சென்னை மாநகராட்சி

Admin

கூப்பிட்டால் வருவேன் ! வாக்குறுதி தந்த பெண் கவுன்சிலருக்கு செக்ஸ் டார்ச்சர் !

Udhaya Baskar

கொரோனா வைரஸ் உருமாற்றத்தால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

Admin

புத்தாண்டைபோல காணும் பொங்கலுக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் – காவல்துறை அறிவிப்பு

Admin

Leave a Comment