ஒரு ரூபா லாபம், 20,000 ரூபா நஷ்டம்; பயணிக்கு பஸ் நிர்வாகம் தண்டம் !

Share

நெல்லை மாவட்டத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து லாபம் பார்த்து வந்த தனியார் பேருந்து நிர்வாகம் பயணி ஒருவர் போட்ட வழக்கில் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிட்டது.

கடந்த 2017ம் ஆண்டு தனியார் பேருந்து ஒன்றில் இசக்கி முத்து என்பவர் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணம் செய்துள்ளார். அப்போது நிர்ணயம் செய்த கட்டணம் அதாவது 24 ரூபாய்க்கு பதில் 25 ரூபாய் வசூலித்துள்ளார். ஒரு ரூபாய் சில்லரை தரமால் ஏமாற்றுவது ஏன் என இசக்கிமுத்து எழுப்பிய கேள்விக்கு நடத்துனர் உரிய பதில் அளிக்கவில்லை.

மேலும் கூடுதலாக வசூலித்த ஒரு ரூபாயை திருப்பியும் தரவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான இசக்கிமுத்து நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு மனஉளைச்சல் தரும் வகையில் தனியார் பேருந்து நிர்வாகம் நடந்து கொண்டதாக கூறியது.

மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கவும் அந்த தனியார் பேருந்து நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஒரு ரூபாய் திருப்பி தரவில்லை என்றால் என்ன செய்துவிடுவார்கள் என நினைத்த நடத்துனரால் அந்த பேருந்து நிர்வாகம் 20 ஆயிரம் ரூபாய் தரும் நிலை ஏற்பட்டுள்ளது.


Share

Related posts

தடுப்பூசி போட்டாதான் ரயிலில் அனுமதி; மராட்டிய அரசு அதிரடி

Udhaya Baskar

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரோனா

Admin

மாணவர்களின் புத்தக பை – புதிய அறிவிப்பு வெளியீடு

Admin

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணம்

Udhaya Baskar

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு

Admin

சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கிய பீலா ராஜேஷ் !

Udhaya Baskar

குன்னூரில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதி வேண்டும் – மா.சுப்பிரமணியன்

Udhaya Baskar

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Udhaya Baskar

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா?

Udhaya Baskar

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

Admin

சென்னை அல்லது மதுரையில் கொரோனா தடுப்பூசி திட்டம் துவக்கப்படும்…

Admin

மதுக்கடைகள் திறப்பு ! அன்புமணி கண்டிப்பு !

Udhaya Baskar

Leave a Comment