குறிப்பிட்ட முக்கிய மருந்துகளுக்கு ‘ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு’

Share

கருப்பு பூஞ்சை நோய்க்கு அளிக்கப்படும் ஆம்போடெரிசின்- பி மருந்துக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், கருப்பு பூஞ்சை நோய்க்கு கொடுக்கப்படும் ஆம்போடெரிசின் பி மருந்து ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. tocilizumab மருந்துக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

ரெம்டெசிவிர், மெடிக்கல் ஆக்சிஜன், வென்டிலேட்டர், கொரோனா பரிசோதனை கிட், பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

கோவிட் பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கே படியுங்கள்
அதே போல சானிடைசர், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி 18%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுவதாகவும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28%ல் இருந்து 12% ஆக குறைக்கப் படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மேலும், கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் மீதான இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு வரும் செப்டம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.


Share

Related posts

கைத்தறிகள் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் – கமல்

Udhaya Baskar

அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Udhaya Baskar

சென்னையில் 2வது விமான நிலைய பணிகளை உடனே தொடங்குக!

Udhaya Baskar

2021-22 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – பாமக

Udhaya Baskar

கலைஞரின் நினைவு நாள் – கழகத்தலைவரின் காணொலி உரை

Udhaya Baskar

தந்தைக்கு பிறந்தநாள் ! மக்கள் சேவையாற்றும் மகன் ! குடும்ப அட்டைதாரர்கள் குதுகூலம் !

Udhaya Baskar

குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் – கமல் உறுதி

Admin

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜிலேபியின் விலை 4 மடங்கு உயர்வு!

Udhaya Baskar

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Udhaya Baskar

Leave a Comment