புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள்- துரைமுருகன் கண்டனம்

Share

புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ள திமுக பொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம் என தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதுவையில் என் ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதை அடுத்து என். ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுவை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 33 சட்டசபை உறுப்பினர்கள் பதவியில் 30 எம்எல்ஏக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதம் 3 பேரை மத்திய அரசு நியமனம் செய்யும். இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த வெங்கடேசன், வி.வி. ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோர் பெயர்களை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து – அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்தார்.

சட்டமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கைக்குத் திமுக சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள துரைமுருகன், “30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டதுதான் புதுச்சேரி சட்டமன்றம்” எனத் தெளிவாக இருக்கின்ற நிலையில் – சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் 33-ஆக உயர்த்தி மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது என குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ரங்கசாமி அவர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி சட்டமன்றத்திற்கு இன்னும் பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குள்ளாக தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதலமைச்சரைக் கூட கலந்து பேசாமல் இப்படியொரு நியமனத்தை ஒன்றிய அரசு செய்து பா.ஜ.க.வின் எண்ணிக்கையை 9-ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது. புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை இந்த நியமன எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வைத்துச் சீர்குலைத்து – கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. செய்யும் முயற்சியே அது என்ற சந்தேகம் புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆரம்பத்திலேயே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு – புதுச்சேரி மக்களின் நலனிலும் – மாநிலத்தில் நிலவும் கொரோனா பரவலைத் தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கவனம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

கனமழை பெய்யப் போவுது; குடை, ரெயின்கோர்ட் வாங்கியாச்சா?

Udhaya Baskar

மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலப் பணிகள் தொடங்கியது – சென்னை மக்கள் மகிழ்ச்சி

Udhaya Baskar

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேம்: அமைச்சர் உறுதி

Admin

எல்லோர்க்கும் எல்லாம் என்பதே இலட்சியம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை விளக்கம்

Admin

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 75% குறைவு: சுகாதாரத் துறை

Admin

நாடு முழுவதும் SBI வங்கி டெபாசிட் ATMகளில் பணம் எடுக்க தடை

Udhaya Baskar

விஜய் சேதுபதியின் “மாஸ்டர் செஃப்” ஆகஸ்ட் 7 முதல்

Udhaya Baskar

வன்னியர் இட ஒதுக்கீடு: 9-ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம்

Admin

குழந்தை வேண்டாமா? குப்பையில் போடாதீர்கள் !

Udhaya Baskar

பாடப்படாத நாயகர்களை கொண்டாடும் விஷ்வ வித்யாபீடம் பள்ளி

Udhaya Baskar

சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

Admin

Leave a Comment